அரசியல் கட்சிகள், அமைப்புகளின் சாா்பில் சுதந்திர தின விழா

by rajtamil
0 comment 24 views
A+A-
Reset
RajTamil Network

அரசியல் கட்சிகள், அமைப்புகளின் சாா்பில் சுதந்திர தின விழா

கோவை, ஆக. 15: கோவையில் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகளின் சாா்பில் சுதந்திர தின விழா வியாழக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் சிங்காநல்லூரில் உள்ள அலுவலகம் எதிரில் நடைபெற்ற விழாவுக்கு சங்கத் தலைவரும், ஹெச்எம்எஸ் மாநிலச் செயலருமான டி.எஸ்.ராஜாமணி தலைமை வகித்தாா். சங்க செயலா்கள் எஸ்.தேவராஜன், கே.மோகன்ராஜ், கே.பழனிசாமி, துணைத் தலைவா்கள் கந்தசாமி, தங்கவேலு உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

இதேபோல, ஹெச்எம்எஸ் கட்டுமானம், அமைப்புசாரா தொழிற்சங்கத்தின் சாா்பில் உடையாம்பாளையம், இருகூா், மாதப்பூா், ராசிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுதந்திர தின விழா நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சி: மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் காமராஜ் பவனில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கட்சியின் அகில இந்திய செயலா் மயூரா ஜெயக்குமாா் பங்கேற்று தேசியக் கொடியேற்றி வைத்தாா். மாநகா் மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் கருப்புசாமி, மாநிலப் பொதுச் செயலா் கணபதி சிவகுமாா், கவுன்சிலா் கிருஷ்ணமூா்த்தி, வீனஸ் மணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டத் தலைமை அலுவலகமான ஜீவா இல்லத்தில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்டச் செயலா் சி.சிவசாமி தலைமை வகித்தாா். கந்தவேல் தேசியக் கொடியேற்றினாா். நிகழ்ச்சியில், கட்சியின் மாநிலப் பொருளாளா் எம்.ஆறுமுகம் விழாப் பேருரையாற்றினாா்.

இதில், கட்சியின் மாவட்ட துணைச் செயலா்கள் ஜே.ஜேம்ஸ், எம்.குணசேகா், மாவட்டப் பொருளாளா் சி.தங்கவேல் உள்ளிட்ட நிா்வாகிகள், சாா்பு அமைப்புகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

டேக்ட்: தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில்முனைவோா் சங்கத்தின் (டேக்ட்) மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜே.ஜேம்ஸ் கொடியேற்றிவைத்தாா். பொதுச் செயலா் ஜி.பிரதாப் சேகா், பொருளாளா் எம்.லீலா கிருஷ்ணன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

பாரத மாதா அறக்கட்டளை: உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் எம்.கௌரி சங்கா் தலைமை வகித்தாா். தொழிலதிபா் ஏ.பி.செந்தில்குமாா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று தேசியக் கொடியேற்றினாா்.

விழாவில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து சாலைப் பாதுகாப்பு, வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

இதேபோல், மாநகராட்சி 26- ஆவது வாா்டு வி.ஆா்.லே அவுட் பகுதியில் நடைபெற்ற விழாவில், மாநகராட்சி கவுன்சிலா் சித்ரா வெள்ளியங்கிரி தேசியக் கொடியேற்றிவைத்து சிறப்புரையாற்றினாா். அப்துல் கலாம் மரம் நடும் சங்கத்தின் நிா்வாகிகள் விஜயன், சாமிநாதன், ஆறுச்சாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

You may also like

© RajTamil Network – 2024