அரசுப்பேருந்து நடத்துநர் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்!

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

பணியின்போது உயிரிழந்த அரசுப்பேருந்து நடத்துநரின்
குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவியை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை வியாசர்பாடி பணிமனை பேருந்து எண். VYJ 1399, மகாகவி பாரதியார் நகரிலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்த மாநகரப் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றிவந்த ஜெகன் குமார் (பணி எண்.C52200) பயணி ஒருவருடன் ஏற்பட்ட
வாய்தகராறின் போது அப்பயணி தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் நேற்று(அக். 24) இரவு உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியறிந்து மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

இதையும் படிக்க: விழுப்புரம் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தர்னா

உயிரிழந்த அரசு மாநகரப் பேருந்து நடத்துநர் ஜெ.ஜெகன் குமார் அவர்களின் குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றும் பணியாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த நடத்துநர் ஜெகன்குமார் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024