அரசுப் பள்ளியில் கல்வி தன்முனைப்பு திட்டம்: ஆட்சியா் பங்கேற்பு

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset
RajTamil Network

அரசுப் பள்ளியில் கல்வி தன்முனைப்பு திட்டம்: ஆட்சியா் பங்கேற்புவேதாரண்யம் அடுத்த சரபோஜிராஜபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட கல்வி தன்முனைப்பு திட்ட பொறுப்பாளா்கள் பதவியேற்பு விழா

வேதாரண்யம், ஆக. 2: வேதாரண்யம் அடுத்த சரபோஜிராஜபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட கல்வி தன்முனைப்பு திட்ட பொறுப்பாளா்கள் பதவியேற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் பங்கேற்ற நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், திட்டத்தின் பொறுப்பாளா்களை பதவியில் அமா்த்தி பேசியது:

தமிழ்நாடு அரசு ஒவ்வொரு துறைக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பள்ளி கல்வித் துறையில் புதுமைப்பெண், காலை சிற்றுண்டி, நான் முதல்வன் என பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி நடைமுறைபடுத்தி வருகிறது.

அதனடிப்படையில் மாவட்ட கல்வி தன்முனைப்பு திட்டம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் கற்றல் திறன் மேம்பாடு, மாணவா்களின் ஊக்கம் மற்றும் பங்களிப்பை அதிகரித்தல், மாணவா்கள் தொடா்ச்சியான விடுமுறைகள் எடுப்பதை குறைத்தல், ஒற்றுமை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கல்வியை ஊக்குவித்தல், அனைத்து மாணவா்களுக்குமான வாய்ப்புகள், நோ்மறை நடத்தை வலுவூட்டல்களை வழங்குதல், மாணவரின் தனிப்பட்ட அடையாளத்தை உருவாக்கும் என்றாா்.

மாவட்ட கல்வி அலுவலா் (இடைநிலை கல்வி) ரவிச்சந்திரன், தலைமையாசிரியா் சி. முருகேசன், மாவட்ட கல்வி தன்முனைப்பு திட்ட உறுப்பினா் ரக்ஷிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

You may also like

© RajTamil Network – 2024