Monday, September 23, 2024

அழகிய ஆடை – ஆபரணங்களால் உள்ளம் கவர்ந்த நடிகை ஜான்வி கபூர்

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

அனந்த் – ராதிகா சங்கீத் கொண்டாட்டம்… அழகிய ஆடையால் உள்ளம் கவர்ந்த ஜான்வி கபூர்நடிகை ஜான்வி கபூர்

நடிகை ஜான்வி கபூர்

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சென்ட் சங்கீத் கொண்டாட்டத்தில் பங்கேற்ற நடிகை ஜான்வி கபூரின் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணம் வரும் 12 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் திருமணத்துக்கு முந்தைய சங்கீத் நிகழ்ச்சி மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் நடைபெற்றது.

இதில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்தபிரபலங்கள் பங்கேற்றனர். குறிப்பாக திரையுலக பிரபலங்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் திரளாக பங்கேற்றனர். சங்கீத் நிகழ்ச்சிக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் கருப்பு கோட்டுடன் வந்து அசத்தினார். நடிகைகள் மாதுரி தீக்ஷித், வித்யா பாலன், ஆலியாபட் ஆகியோர் மிக நேர்த்தியான உடைகளில் தேவதைகள் போல் ஜொலித்தனர்.

விளம்பரம்

அனன்யா பாண்டே, நேஹா சர்மா உள்ளிட்ட இளம் நடிகைகளும் சங்கீத் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நடிகை ஜெனிலியா தனது கணவர் ரித்திஷ் தேஷ்முக்குடன் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த உடையுடன் பங்கேற்றார்.

இதையும் படிங்க – தோனி முதல் அட்லீ வரை.. அனந்த் அம்பானி – ராதிகா மெர்சன்ட் சங்கீத் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள்

பிரபல கிரிக்கெட் வீரர்கள் மகேந்திர சிங் தோனி மனைவி சாக்ஷியுடன் பங்கேற்றார். ஐபிஎல் போட்டிகளின்போது நீண்ட முடியுடன் இருந்த தோனி, தனது சிகை அலங்காரத்தை மாற்றியுள்ளார். புகைப்பட கலைஞர்களுக்கு தோனி தம்பதியர் அழகாக போஸ் கொடுத்தனர்.

விளம்பரம்

இதேபோன்று இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக மாறியிருக்கும் ஜான்வி கபூர் அழகிய ஆடையால் பார்வையாளர்களின் கவனத்தை தன்பக்கம் திருப்பினார்.

உள்ளத்தை கொள்ளை கொள்ளும் மயிலிறகு வண்ணத்தில் அவர் அணிந்து வந்த லெஹங்கா உடை ஜான்வி கபூருக்கு அழகு சேர்த்தது. இரவு விருந்துக்கு பிறகு ஜான்வி கபூர் அணிந்து வந்த பார்ட்டி உடையைப் பார்த்து பலரும் மனதை பறிகொடுத்தார்கள் என்றே சொல்லலாம்.

ஜான்வி கபூரின் கடல் நீல நிற மணிகள் கொண்ட காதணிகள் மற்றும் மோதிரங்கள் அவ்வளவு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தன. அவர் உச்சி முதல் பாதம் வரை இருந்த அணிகலன்கள் ஒவ்வொன்றும், நெஞ்சத்தை கொள்ளை கொண்டதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

தற்போது ஜான்வி கபூரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Anant Ambani
,
Janhvi kapoor

You may also like

© RajTamil Network – 2024