Friday, September 20, 2024

அவரைப்போல் யாரும் யார்க்கர் பந்துகளை சிறப்பாக வீசுவதில்லை – பிரெட் லீ பாராட்டு

by rajtamil
0 comment 49 views
A+A-
Reset

ஜஸ்பிரித் பும்ராவைபோல நிறைய பவுலர்கள் டெத் ஓவர்களில் துல்லியமான யார்க்கர் வீசி விக்கெட்டுகளை எடுப்பதில்லை என்று பிரெட் லீ பாராட்டியுள்ளார்.

சிட்னி,

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் அடுத்த மாதம் கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் 2007- க்கு பின் கோப்பையை வெல்லும் முனைப்புடன் இந்திய கிரிக்கெட் அணி களமிறங்குகிறது. கடந்த டி20 உலகக்கோப்பையை காயத்தால் தவற விட்ட ஜஸ்பிரித் பும்ரா இம்முறை இந்திய அணியின் வெற்றிக்கு வேகப்பந்து வீச்சுத் துறையின் ஆணிவேராக பார்க்கப்படுகிறார்.

ஏனெனில் வித்தியாசமான பவுலிங் ஆக்சனை கொண்ட அவர் தன்னுடைய தரமான பந்துகளால் உலகின் அனைத்து டாப் பேட்ஸ்மேன்களையும் திணறடித்து வருகிறார். குறிப்பாக பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கக்கூடிய டி20 கிரிக்கெட்டில் எந்த நேரத்திலும் துல்லியமான யார்க்கர் பந்தை வீசி விக்கெட்டை எடுக்கும் திறமை கொண்ட அவர் இந்திய அணியின் துருப்பு சீட்டாக வலம் வருகிறார்.

தற்போது நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் பும்ரா 14 போட்டிகளில் 20 விக்கெட்களை எடுத்தார். எனவே நல்ல பார்மில் இருக்கும் அவர் இந்தியாவின் துருப்புச் சீட்டாக இருப்பார் என்று உறுதியாக சொல்லலாம். இந்நிலையில் உலகிலேயே தற்சமயத்தில் ஜஸ்பிரித் பும்ராவைபோல நிறைய பவுலர்கள் டெத் ஓவர்களில் துல்லியமான யார்க்கர் பந்துகளை வீசி விக்கெட்டுகளை எடுப்பதில்லை என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிரெட் லீ பாராட்டியுள்ளார்.

எனவே ஐபிஎல் போன்ற டி20 தொடரில் பவுலர்கள் யார்க்கர் பந்துகளை அதிகமாக வீச வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "சமீப காலங்களில் பும்ராவை தவிர்த்து வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பான யார்க்கர் பந்துகளை வீசுவதை பார்க்க முடியவில்லை. வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக யார்க்கர் பந்துகளை வீசுவதை நான் பார்க்க விரும்புகிறேன். டெத் ஓவர்களில் அவர்கள் யார்க்கர் பந்துகளை செயல்படுத்துவதாக எனக்குத் தெரியவில்லை.

17 வருட ஐ.பி.எல். தொடரை நீங்கள் திரும்பி பார்க்கும்போது யார்க்கர் பந்துகளுக்கு எதிராக சராசரியான ஸ்ட்ரைக் ரேட் 100-க்கும் குறைவாகவே இருக்கிறது. அது குறைவான பவுலர்கள் மட்டுமே யார்க்கரை செயல்படுத்துகிறார்கள் என்பதை எனக்கு காட்டுகிறது. தற்போது நீங்கள் யார்க்கர் பந்தை வீசும்போது பேட்ஸ்மேன்கள் தலைக்கு மேலே ஸ்கூப் ஷாட் அடிக்கிறார்கள். அது பவுலர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. அது போன்ற சூழ்நிலையில் நீங்கள் சரியான பீல்டிங்கை செட் செய்து யார்க்கர் பந்துகளை வீசலாம்" என்று கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024