ஆக்சிஸ், ஹெச்டிஎஃப்சி வங்கிகளுக்கு ரூ. 2.91 கோடி அபராதம்: ஆர்பிஐ

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

ஒழுங்குமுறை விதிகளை மீறியதாக ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ரூ. 2.91 கோடி அபராதம் விதித்துள்ளது.

இதுகுறித்து ஆர்பிஐ செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் சில விதிகளை மீறியதற்காகவும், டெபாசிட் மீதான வட்டி விகிதம், கேஒய்சி, விவசாயிகளுக்கான கடன் ஆகியவற்றில் சில வழிகாட்டுதல்களை பின்பற்றாததற்காகவும் ஆக்சிஸ் வங்கிக்கு ரூ. 1.91 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருக்கலைப்பு, பொருளாதாரம்: டிரம்ப்-கமலா ஹாரிஸ் இடையே காரசார விவாதம்!

ஆக்சிஸ் வங்கி, தகுதியற்ற நிறுவனங்களின் பெயரில் சில சேமிப்பு வைப்பு கணக்குகளைத் தொடங்கியுள்ளது. மேலும், ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தனிப்பட்ட வாடிக்கையாளர் அடையாளக் குறியீடு (UCIC) வழங்குவதற்குப் பதிலாக, குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு பல வாடிக்கையாளர் அடையாளக் குறியீடுகளை ஒதுக்கியுள்ளது.

அதுபோல, விவசாயக் கடனுக்கு ரூ. 1.60 லட்சம் வரையிலான பிணையப் பாதுகாப்புத் தொகையை பெற்றுள்ளதாக ரிசர்வ் வங்கி விளக்கம் தெரிவித்துள்ளது.

ஹெச்டிஎஃப்சி வங்கிக்கு டெபாசிட் மீதான வட்டி விகிதம், வங்கிக் கடன்களை வசூலிக்கும் முகவர்கள், வங்கிகளில் வாடிக்கையாளர் சேவை ஆகியவை குறித்த சில வழிகாட்டுதல்களை பின்பற்றாததற்காக ரூ. 1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஹெச்டிஎஃப்சி வங்கியைப் பொருத்தவரை, வாடிக்கையாளர்கள், வைப்புத்தொகையை வைக்கும்போது ரூ. 250 மதிப்புள்ள ஆயுள் காப்பீட்டுக்கான முதல் ஆண்டு பிரீமியத்தை பரிசாக வழங்கியுள்ளது, தகுதியற்ற நிறுவனங்களின் பெயரில் சில சேமிப்பு வைப்புக் கணக்குகளைத் திறந்து, வாடிக்கையாளர்களை இரவு 7 மணிக்குப் பிறகும் காலை 7 மணிக்கு முன்பும் தொடர்புகொண்டுள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024