Wednesday, September 25, 2024

ஆக்ரமிப்பு கட்டடங்கள் இடிப்பு.. உ.பி. காவல் நிலையமும் தப்பவில்லை!

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

லக்னௌ: உத்தரப்பிரதேச மாநிலம் லக்னௌவில், சாலையை விரிவாக்கம் செய்ய ஆக்ரமித்து கட்டப்பட்ட கட்டங்களை இடிக்கும் பணியில், காவல் நிலையத்தின் சுற்றுச்சுவரும் இடிக்கப்பட்டது அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

சித்தார்த்நகர், கோட்வாலி காவல்நிலையத்தின் முன்று இன்று காலை ஜேசிபி வாகனம் நிறுத்தப்பட்டபோது அது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், அதன் நீண்ட கை போன்ற அமைப்பு காவல்நிலையத்தின் சுற்றுச்சுவரை இடித்துத் தகர்க்கும்போதுதான் அதிர்ச்சி பரவியது.

அப்பகுதியில் அமைந்துள்ள 55 ஆக்ரமிப்புக் கட்டடங்களின் பட்டியலில், இந்த காவல்நிலையமும் இடம்பெற்றுள்ளது. இந்த ஆக்ரமிப்புக் கட்டடங்களால், சாலையே பாதியாகச் சுருங்கியிருந்தது அப்பகுதியில்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஆக்ரமிப்புக் கட்டடங்களை அளவெடுத்த குழுவில் இருந்த காவல்துறையினர், அதில் தங்களது காவல்நிலையமும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், என்ன செய்ய முடியும்?

எப்போதும் சங்கி என்பார்கள், பூமர் அங்கிள் என்று கூறியிருப்பது மகிழ்ச்சியே: ஸ்ரீதர் வேம்பு

இன்று காலை ஜேசிபியால், காவல்நிலைய சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டபோது, அதிலிருந்து காவலர்கள், எவ்வாறு எழுத்துப்பூர்வ கடிதம் அளிக்காமல் இடிக்கலாம் என்று கேள்வி எழுப்பினர். இதற்கு அதிகாரிகள், நாங்கள் ஆக்ரமிப்புக் கட்டடங்களை இடிக்க வந்தோம், அதில் ஒரு கட்டடத்துக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்க முடியுமா என்று கேள்வி கேட்டனர்.

மேலும், அருகில் உள்ள தாசில்தாரர் அலுவலக சுற்றுச் சுவரும் ஆக்ரமித்துத்தான் கட்டப்பட்டுள்ளது என்ற காவல்துறையினர் சுட்டிக்காட்டிய நிலையில், ஜேசிபி வாகனம், அந்த சுற்றுச்சுவரை இடித்துத் தள்ளிவிட்டு மீண்டும் காவல்நிலையம் வந்து சுற்றுச்சுவரை இடிக்கும் வேலையைத் தொடங்கியது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், தங்களது வீடுகள், கடைகள் இடிக்கப்பட்டதை நினைத்து அதுவரை கவலையடைந்திருந்த நிலையில், இந்த சம்பவத்துக்கு கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

அங்கிருந்த ஆக்ரமிப்புக் கட்டடங்களில் காவல்நிலையம் மட்டுமல்ல, ஏராளமான அரசுக் கட்டடங்களும் இருந்தன. முன்பு 6 மீட்டர் இருந்த சாலை தற்போது 13 மீட்டராக தனது பழைய உருவத்தைப் பெற்றுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024