Saturday, September 21, 2024

“ஆக.15 முதல் ‘ஜெய்ஹிந்த்’ சொல்வது கட்டாயம்” – மாணவர்களுக்கு உத்தரவு

by rajtamil
0 comment 20 views
A+A-
Reset

“ஆக.15 முதல் அரசு பள்ளி மாணவர்கள் ‘ஜெய்ஹிந்த்’ சொல்வது கட்டாயம்” – ஹரியானா பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவுபள்ளி

பள்ளி

ஹரியானா மாநிலத்தில் ஆசிரியர்களுக்கு, பள்ளி மாணவர்கள் good morning, good afternoon என வணக்கம் தெரிவிப்பதற்குப் பதிலாக ஜெய்ஹிந்த் என்று கூறுவது கட்டாயமாக்கப்பட இருக்கிறது.

இதுதொடர்பாக மாநில பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதன்படி, மாணவர்கள் மத்தியில் நாட்டுப்பற்றை வளர்க்கும் வகையில், வரும் 15-ஆம் தேதி முதல் இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்பட இருக்கிறது.

இந்த புதிய முறையை அமல்படுத்தும் வகையில், பணிகளை மேற்கொள்ள பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தேசத்தின் வரலாறு குறித்து மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில், இந்த புதிய நடவடிக்கை இருக்கும் என்று கல்வித்துறை சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

விளம்பரம்

மாணவர்கள் மத்தியில் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வு வளரும் என்பதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
haryana
,
school

You may also like

© RajTamil Network – 2024