Tuesday, September 24, 2024

ஆசியாவின் சிறந்த 50 பார்களின் பட்டியலில் இடம்பிடித்த பெங்களூரு பார்!!!

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

2024ஆம் ஆண்டிற்கான ஆசியாவின் சிறந்த 50 பார்களின் பட்டியலில் இடம்பிடித்த பெங்களூரு பார்.!!!2024ஆம் ஆண்டிற்கான ஆசியாவின் சிறந்த 50 பார்களின் பட்டியலில் இடம்பிடித்த பெங்களூரு பார்.!!!

2024ஆம் ஆண்டிற்கான ஆசியாவின் சிறந்த 50 பார்களின் பட்டியல் சமீபத்தில் ஹாங்காங்கில் நடந்த விழா ஒன்றில் அறிவிக்கப்பட்டது. இதில் ஹாங்காங்கை சேர்ந்த பார் லியோன், சியோலில் உள்ள ஜெஸ்ட் மற்றும் சிங்கப்பூரில் உள்ள ஜிகர் & போனி உள்ளிட்ட பார்கள் முறையே டாப் 3 இடங்களை பிடித்துள்ளன.

ஆசியாவின் டாப் 50 பார்களின் பட்டியலில் இந்தியாவின் பெங்களூருவின் லீலா பேலஸ் வளாகத்தில் அமைந்துள்ள ZLB23 பார் 40ஆவது இடத்தை பிடித்துள்ளது. ZLB23 பாருக்கு செல்ல ஒருவர் கார்டன் ஸ்பேஸ் மற்றும் ஹோட்டலின் பரபரப்பான கிச்சனை கடந்து நடந்து சென்று சர்வீஸ் லிஃப்ட்டில் செல்ல வேண்டும்.

விளம்பரம்

ஒரு பிரபலமான சிட்டி ஹோட்டலில் இந்த ZLB23 பார் இருந்தபோதிலும் அற்புதமான வெல்வெட் திரைச்சீலைகள் மற்றும் கிரிஸ்டல் chandeliers-களால் அலங்கரிக்கப்பட்டு காண்போரை வெகுவாக கவர்கிறது. மேலும் ZLB23 பாரின் சூப்ரவைசர் மேற்பார்வையாளர் பிரியங்கா மொண்டல் தனது படைப்பாற்றலை ஜப்பானிய பழைய பாணியிலான ட்ரிங்க்ஸ் மூலம் வெளிப்படுத்துகிறார். இவர் ஜப்பானிய விஸ்கியை வீட்டில் தயாரிக்கப்பட்ட பெருஞ்சீரக சிரப் மற்றும் ஷிசோ நெக்ரோனியுடன் கலந்து சுவைப்போருக்கு திருப்தியான சுவையை அளிக்கிறார்.

அதேபோல மற்றொரு இந்திய சாதனையும் கொண்டாடப்பட வேண்டியதாக இருக்கிறது. இந்த நிகழ்வில், Yangdup Lama என்பவர் ரோகு இண்டஸ்ட்ரி ஐகான் விருது 2024-ன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ஆக்கப்பூர்வமான காக்டெய்ல் தயாரிப்பதற்கான இவரது அர்ப்பணிப்பு, இந்தியாவில் பார் துறையை தொழில்முறைமயமாக்குவதற்கான உந்துதல் மற்றும் அவரது மிகவும் முற்போக்கான பணிச்சூழலுக்கான பார்வை ஆகியவற்றை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

முன்னதாக கடந்த வாரம், ஆசியாவின் சிறந்த பார்கள் 51 – 100 பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் நான்கு இந்திய பார்கள் இடம்பெற்றிருந்தன. மும்பை பாம்பே கேன்டீன் 59-வது இடத்தையும், புது டெல்லியில் உள்ள லேயர் 68-வது இடத்தையும், புது டெல்லியை சேர்ந்த சைட்கார் 84-வது இடத்தையும், புது டெல்லியை சேர்ந்த ஹோம் 96-வது இடத்தையும் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:கன்னடர்களுக்கு 100% வேலை வாய்ப்பு வழங்கும் மசோதா நிறுத்தி வைப்பு – கர்நாடக அரசு

விளம்பரம்

2024ஆம் ஆண்டிற்கான ஆசியாவின் சிறந்த 50 பார்களின் முழு பட்டியல்:

1. பார் லியோன், ஹாங்காங்

2. ஜெஸ்ட், சியோல்

3. ஜிகர் & போனி, சிங்கப்பூர்

4. கோ (Coa), ஹாங்காங்

5. பார் பென்ஃபிடிச், டோக்கியோ

6. நட்மெக் & க்ளவ், சிங்கப்பூர்

7. பிகேகே சோஷியல் கிளப், பாங்காக்

8. பென்ரோஸ், கோலாலம்பூர்

9. ஆர்கோ, ஹாங்காங்

10. தி ஆப்ரே, ஹாங்காங்

11. விர்டு, டோக்கியோ

12. தி காக்டெய்ல் கிளப், ஜகார்த்தா

13. வெஸ்பர், பாங்காக்

14. ஹோப் & சீசம், குவாங்சூ

15. சாகோ ஹவுஸ், சிங்கப்பூர்

விளம்பரம்

16. நைட் ஹாக், சிங்கப்பூர்

17. டார்க்சைட், ஹாங்காங்

18. மஹானியோம் காக்டெய்ல் பார், பாங்காக்

19. தி சாவோரி ப்ராஜக்ட், ஹாங்காங்

20. பார் சாம், சியோல்

21. பார் யுஎஸ், பாங்காக்

22. 22. செயின்ட் ரெஜிஸ் பார், மக்காவ்

23. தி எஸ்ஜி கிளப், டோக்கியோ

24. பென்சிலின், ஹாங்காங்

25. ஆஃப்ட்ராக், சிங்கப்பூர்

26. குயினரி, ஹாங்காங்

27. பன்ட்ஜா, ஜகார்த்தா

28. கிராஃப்ட்ரூம், ஒசாகா

29. ஸ்மோக் & பிட்டர்ஸ், ஹெரிகேடியா

30. வென்டர், தாய்ச்சுங்

31. நேட்டிவ், சிங்கப்பூர்

32. ஆர்ஜின் பார், சிங்கப்பூர்

33. தி கியூரேட்டர், மணிலா

விளம்பரம்

34. பெல்வுட், டோக்கியோ

35. அனலாக் இனிஷியேட்டிவ், சிங்கப்பூர்

36. பார் ட்ரிகோனா, கோலாலம்பூர்

37. பார் மூட், தைபே

38. எம்ப்ளாயிஸ் ஒன்லி, சிங்கப்பூர்

39. பார்க், காத்மாண்டு

40. இசட்எல்பி23, பெங்களூரு

41. ரேகா, கோலாலம்பூர்

42. ஃப்புரா, சிங்கப்பூர்

43. சிஎம்ஒய்கே, சாங்ஷா

44. தி பப்ளிக் ஹவுஸ், தைபே

45. மோஸ்ட்லி ஹார்ம்லஸ், ஹாங்காங்

46. ஆலிஸ், சியோல்

47. தி ஹாஃப்லிங்டன், ஹனோய்

48. லீ சேம்ப்பர், சியோல்

49. அட்லஸ், சிங்கப்பூர்

50. பைன் & கோ, சியோல்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Bangalore

You may also like

© RajTamil Network – 2024