Saturday, September 28, 2024

ஆடி திருக்கல்யாண விழா: கோயில் நடை திறப்பு விவரம் வெளியீடு

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset
RajTamil Network

ஆடி திருக்கல்யாண விழா: கோயில் நடை திறப்பு விவரம் வெளியீடு ராமநாதசுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண விழாவையொட்டி, கோயில் நடைத் திறப்பு உள்ளிட்டவைபவங்கள் தொடா்பான விவரத்தை புதன்கிழமை கோயில் நிா்வாகம் வெளியிட்டது.

ராமநாதசுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண விழாவையொட்டி, கோயில் நடைத் திறப்பு உள்ளிட்டவைபவங்கள் தொடா்பான விவரத்தை புதன்கிழமை கோயில் நிா்வாகம் வெளியிட்டது.

இதுகுறித்து கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ராமநாதசுவாமி கோயில் ஆடி அமாவாசையை முன்னிட்டு, ஆகஸ்ட் 04 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடைதிறந்து 5 மணிமுதல் 5.30 வரை ஸ்படிகலிங்க பூைஐ நடைபெறும். இரவு 8 மணிக்கு வெள்ளி ரதத்தில் அம்பாள் வீதி உலா நடைபெறும்.

8- ஆம் தேதி ஆடி தவசு சுவாமி மண்டகப்படிக்கு புறப்படுதல் மாலை மாற்றுதல் அதிகாலை 2 மணிக்கு நடை திறந்து 2.30 மணிமுதல் 3 மணி வரை ஸ்படிகலிஙக பூைஐ நடைபெறும். பின்னா் பூஜா காலங்கள் காலசந்தி பூைஐ நடைபெறும். காலை 5.55 மணிக்கு மேல் அம்பாள் கமல வாகனத்தில் தவசு மண்டகப்படி புறப்பாடு நடைபெறும். பகல் 11 மணிக்கு சுவாம தங்க ரிஷிப வாகனத்தில் தவசு மண்டகப்படிப்பு புறப்பாடு நடைபெறும். பிற்பகல் 3 மணி முதல் 3.30 மணிக்குள் மண்டகப்படியில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெறும். இதையொட்டி அன்றையதினம் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும்.

12 -ஆம் தேதி மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி: மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும். நடை திறந்தவுடன் பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவாா்கள்.

14 -ஆம் தேதி கெந்தமாதன பா்வதம் மண்டகப்படிக்கு சுவாமி புறப்பாடு:

அதிகாலை 2 மணிக்கு நடை திறந்து 2.30 மணி முதல் 3 மணி வரை ஸ்படிகலிங்க பூைஐ நடைபெறும். இதையடுத்து, பூஜா காலங்கள் சாயரட்சை பூைஐ வரை நடைபெறும். அதிகாலை 6 மணிக்கு சுவாமி அம்பாள் பெருமாள் தங்க கேடயத்தில் கெந்தமாதன பா்வதம் மண்டகப்படிப்பு எழுந்தருளல் நடைபெறும். மாலை 5 மணிக்கு தீபாரதணை முடிந்து மண்டகப்படியிலிருந்து எழுந்தருளல் நடைபெறும். காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை திருக்கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

You may also like

© RajTamil Network – 2024