Wednesday, November 6, 2024

ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் நிதி- அமித்ஷா உறுதி

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

மெந்தர்,

காஷ்மீரில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில் முதல்கட்ட தேர்தல் கடந்த 18-ந் தேதி நடந்த நிலையில், வருகிற 25 மற்றும் அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ந் தேதிகளில் மீதமுள்ள 2 கட்ட தேர்தலும் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா காஷ்மீரில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் பூஞ்ச் மாவட்டத்தி நடைபெற்ற கூட்டத்தில் அமித்ஷா கூறியதாவது:-

முந்தைய ஆட்சியாளர்கள் பாகிஸ்தானை கண்டு அஞ்சினர். ஆனால் இன்று பாகிஸ்தான்தான் பிரதமர் மோடியைப்பார்த்து அஞ்சுகிறது. அதனால்தான் எல்லைகள் அமைதியாக உள்ளன.மீண்டும் எல்லை தாண்டிய தாக்குதலை நடத்த அவர்கள் துணியமாட்டார்கள்.

அப்படி அவர்கள் துணிந்தால், அவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும். காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்தால் மாதம் ரூ.500 யூனிட் மின்சாரம் வீடுகளுக்கு இலவசமாக வழங்கப்படும். இரண்டு எல்பிஜி சிலிண்டர்கள் இலவசமாக வழங்குவோம். விவசாயிகளுக்கு தற்போதுள்ள ரூ.6 ஆயிரம் நிதிக்கு பதிலாக ரூ.10 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படும்" என்றார்.

You may also like

© RajTamil Network – 2024