ஆட்டத்தை ஆரம்பித்த சீனா… 2-வது தங்கம் வென்று அசத்தல்

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பெண்கள் டைவிங் ஸ்பிரிங்போர்டு போட்டியில் சீனா தங்கப்பதக்கம் வென்றது.

பாரீஸ்,

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 'ஒலிம்பிக்' போட்டி பாரீஸ் நகரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் 2-வது நாளான இன்று மொத்தம் 14 தங்கப்பதக்கங்களுக்கு போட்டிகள் நடக்கின்றன.

இந்நிலையில் பாரீஸ் ஒலிம்பிக்கில் தனது இரண்டாவது தங்கப்பதக்கத்தை சீனா வென்றுள்ளது. பெண்களுக்கான டைவிங் ஸ்பிரிங்போர்டு போட்டியில் சீனா தங்கபதக்கத்தை வென்றது. சீனா பல ஆண்டுகளாக டைவிங்கில் அசத்தி வருகிறது, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டோக்கியோவில் எட்டு தங்கப் பதக்க போட்டிகளில் ஏழு பதக்கங்களை வென்றது.

இன்று நடைபெற்ற போட்டியில், 3 மீட்டர் ஸ்பிரிங்போர்டில் சீன வீரர்கள் முதல் ஐந்து டைவ்களில் 337.68 புள்ளிகள் பெற்றிருந்தனர். அவர்களைத் தொடர்ந்து அமெரிக்காவின் சாரா பேகன் மற்றும் காசிடி குக் 314.64 புள்ளிகளும், பிரிட்டன் அணியின் யாஸ்மின் ஹார்பர் மற்றும் ஸ்கார்லெட் மியூ ஜென்சன் ஆகியோர் 302.28 புள்ளிகளும் பெற்றனர்.

முன்னதாக 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு பிரிவில் சீனாவின் ஹுவாங் யுடிங், ஷெங் லிஹாவ் ஜோடி, கொரியா அணியை வீழ்த்தி முதல் தங்கத்தை வென்றிருந்தது.

You may also like

© RajTamil Network – 2024