ஆதரவற்ற மாற்றுத் திறன் சிறுவர்கள் 1,008 பேர் ஏழுமலையானை தரிசிக்க தனி ரயிலில் திருப்பதி பயணம்

ஆதரவற்ற மாற்றுத் திறன் சிறுவர்கள் 1,008 பேர் ஏழுமலையானை தரிசிக்க தனி ரயிலில் திருப்பதி பயணம்

சென்னை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் தமிழ்நாடு ஆலோசனைக் குழு, சென்னை ரோட்டரி சங்கம் சார்பில்,ஆதரவற்ற, மாற்றுத் திறன் சிறுவர்கள் 1,008 பேர் ஆன்மிக பயணமாக சென்னையில் இருந்து திருப்பதிக்கு தனி ரயிலில் அழைத்து செல்லப்பட்டனர்.

தமிழ்நாடு ஆலோசனைக் குழு, சென்னை ரோட்டரி சங்கம் சார்பில்,ஆண்டுதோறும் ஆதரவற்ற, மாற்றுதிறன் சிறுவர்களை மகிழ்விக்கும் விதமாக, கேளிக்கை அரங்குகளுக்கும், சுற்றுலாவுக்கும் அழைத்துசெல்கின்றனர்.

அந்த வகையில், கடந்த ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்துடன் இணைந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 1,008 சிறப்பு குழந்தைகளை ஆன்மிக பயணமாக தனி ரயில் மூலம் அழைத்து சென்றனர்.

அதேபோல, இந்த ஆண்டிலும்,1,008 ஆதரவற்ற, மாற்றுத் திறன் சிறுவர்களை நேற்று திருப்பதிக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை சென்ட்ரல்ரயில் நிலையத்தில் இருந்து அவர்கள் அனைவரும் ரேணி குண்டா வரை செல்லும் சிறப்பு ரயிலில் புறப்பட்டு சென்றனர்.

இந்த ஆன்மிக பயணத்தை அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் – தமிழ்நாடு ஆலோசனை குழு முன்னாள் தலைவர் சேகர் ரெட்டி ஆகியோர் கொடிய சைத்து தொடங்கி வைத்தனர்.

இதுகுறித்து சேகர் ரெட்டி கூறியதாவது: 1,008 சிறுவர்களும் திருப்பதியில் இலவசமாக சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறுவர்களுடன் மருத்துவகுழுவினர், தன்னார்வலர்களும் உடன் செல்கின்றனர். மொத்தம் 1,500 பேர் ரயிலில் பயணம் செய் கின்றனர்.

அடுத்த ஆண்டு முதியோரையும் திருப்பதிக்கு இலவசமாக ஆன்மிக பயணம் அழைத்து செல்ல திட்டமிட்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாத ஈரியா மற்றும் தனியார் தொண்டு நிறுவனத் தினர் பங்கேற்றனர்.

Related posts

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் பிரகாஷ் காரத்துக்கு இடைக்கால பொறுப்பு

“டெல்லியில் காட்டாட்சி நடக்கிறது..”: அமித் ஷா மீது அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

ஜம்மு-காஷ்மீரில் இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரம் முடிந்தது: அக்.1ம் தேதி வாக்குப்பதிவு