Tuesday, September 24, 2024

ஆந்திரத்தில் கனமழை: சென்னையிலிருந்து புறப்படும் ரயில்கள் ரத்து!

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

ஆந்திர பிரதேசத்தில் கனமழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளிலும், ரயில் பாதைகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரம், தெலங்கானாவில் நீடிக்கும் கனமழை: உயிரிழப்பு 31-ஆக அதிகரிப்பு

விஜயவாடாவில் கனமழை

இந்த நிலையில், ஆந்திர பிரதேசம், தெலங்கானா மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் பல, மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட்டுள்ளன, பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளடன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

  • இன்று(செப். 3) மாலை 6.40 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் – புதுதில்லி கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ்(12615) ரத்து செய்யப்பட்டுள்ளது.

  • அதேபோல, இரவு 7 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் – ஹௌரா மெயில்(12840) ரத்து செய்யப்பட்டுள்ளது.

  • ஜெய்ப்பூரிலிருந்து இரவு 7.35 மணிக்கு புறப்பட வேண்டிய ஜெய்ப்பூர் – கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ்(12970) ரத்து செய்யப்பட்டுள்ளது.

  • ஷாலிமர் – சென்னை சென்ட்ரல்இடையே இயக்கப்படும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ்(12841) ரத்து செய்யப்பட்டுள்ளது.

  • புதன்கிழமை(செப். 4) காலை 7.15 மணிக்கு புறப்பட வேண்டிய தாம்பரம் – சந்திரகாசி அந்தியோதயா எக்ஸ்பிரஸ்(22842) ரத்து செய்யப்பட்டுள்ளது.

  • பிற்பகல் 2.15 மணிக்கு புறப்பட வேண்டிய ரத்து புதுச்சேரி – ஹௌரா எக்ஸ்பிரஸ்(12868) ரத்து செய்யப்பட்டுள்ளது.

  • இரவு 9.05 மணிக்கு புறப்பட வேண்டிய புதுதில்லி – சென்னை சென்ட்ரல் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்(12622) ரத்து செய்யப்பட்டுள்ளது.

  • சனிக்கிழமை(செப். 7) அதிகாலை 3 மணிக்கு புறப்பட வேண்டிய திருநெல்வேலி – புரூலியா எக்ஸ்பிரஸ்(22606) ரத்து செய்யப்பட்டுள்ளது.

  • சனிக்கிழமை(செப். 7) அதிகாலை 5.50 மணிக்கு புறப்பட வேண்டிய கன்னியாகுமரி – ஹௌரா எக்ஸ்பிரஸ்(12666) ரத்து செய்யப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024