ஆந்திராவில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த முதியவர் சாவு

by rajtamil
0 comment 36 views
A+A-
Reset

உடல்நிலை சரியில்லாமல் முதியவர் கீழே மயங்கி விழுந்தார்.

குமரி,

இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்து உள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். தற்போது கோடைவிடுமுறை விடப்பட்டு உள்ளதால் மக்கள் குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு படையெடுத்து வந்த வண்ணமாக உள்ளனர்.

இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 40 பேர் கொண்ட குழுவினர் நேற்று கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். அந்த குழுவில் ராமச்சந்திரபுரம் தாலுகா கோதாவரியை சேர்ந்த முரளி கிருஷ்ணன் (வயது 60) என்பவரும் வந்திருந்தார்.

இவர் நேற்று மாலை 5.45 மணிக்கு கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென உடல்நிலை சரியில்லாமல் கீழே மயங்கி விழுந்துள்ளார். உடனே அவருடன் வந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திராவில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024