Sunday, September 22, 2024

ஆந்திர முதலமைச்சராக ஜூன் 12ஆம் தேதி பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு

by rajtamil
Published: Updated: 0 comment 18 views
A+A-
Reset

ஆந்திர முதலமைச்சராக ஜூன் 12ஆம் தேதி பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு!!!சந்திரபாபு

சந்திரபாபு

ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ஜூன் 12ஆம் தேதி பதவியேற்கிறார்.

ஆந்திராவில் மக்களவைத் தேர்தலோடு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி மற்றும் பாஜகவோடு கூட்டணி அமைத்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சி, ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.

இந்நிலையில், ஜூன் 12 ஆம் தேதி காலை 11:27 மணிக்கு கிருஷ்ணா மாவட்டம் கன்னவரத்தில் உள்ள கேசரபள்ளி ஐடி பார்க் அருகே பதவியேற்பு விழா நடைபெறும் என சந்திரபாபு நாயுடு தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்தார்.

விளம்பரம்

இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மாநில ஆளுநர் அப்துல் நசீர் மற்றும் பிற முக்கியஸ்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக தலைமைச் செயலாளர் நீரப் குமார் பிரசாத் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:
3 லட்சம் வைத்து தொடங்கிய தொழில்.. இன்று 150 கோடி மதிப்பு.. 27 வயதில் 195 நகரங்களில் வியாபாரம்!

பதவியேற்பு விழாவின் மாநில ஒருங்கிணைப்பாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி பி.எஸ்.பதியும்னா நியமிக்கப்பட்டுள்ளார். ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக நான்காவது முறையாக சந்திரபாபு நாயுடு பதவியேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Andhra Pradesh
,
chandhrababu naidu
,
N Chandrababu Naidu

You may also like

© RajTamil Network – 2024