ஆந்திர வெள்ள நிவாரணம்: ரூ.25 கோடி வழங்கிய அதானி அறக்கட்டளை!

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset

ஆந்திரத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளுக்கு முதல்வரின் நிவாரண நிதியாக அதானி அறக்கட்டளை ரூ.25 கோடியை முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் வழங்கியுள்ளது.

செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் கடலோர மாவட்டங்களான ஆந்திரம் மற்றும் தெலங்கானாவில் பெய்த கனமழையால் பலரும் பாதிப்புக்குள்ளாகினர்.

வெள்ள பாதிப்புகளுக்கு முதல்வரின் நிவாரண நிதியாக பல்வேறு திரை நட்சத்திரங்களும் நிதியுதவி அளித்தனர். அதேபோல கௌதம் அதானியின் அறக்கட்டளை சார்பில் ரூ.25 கோடி வழங்கியுள்ளனர்.

சேப்பாக்கத்தில் கொளுத்தும் அஸ்வின் அண்ணா..! பிசிசிஐ புகழாரம்!

இதுகுறித்து அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில், “அதானி குழுமத்தின் அதானி அறக்கட்டளை ஆந்திரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.25 கோடியை வழங்கியுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் அதானி அறக்கட்டளை உதவியாக துணை நிற்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நிவாரணம் வழங்கியது குறித்து அதானி குழுமத்தின் நிர்வாக செயல் இயக்குநர் கரண் அதானியும் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

மாரடைப்பு யாருக்கெல்லாம் ஏற்படும்? – நம்பிக்கையும் உண்மையும்!

அந்தப் பதிவில், “முதல்வரின் நிவாரண நிதியாக பணம் கொடுத்தது எங்கள் கடமையாகும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதில் நாங்கள் அவர்களுடன் இருக்கிறோம்”எனக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அதிகப்படியான இடங்களில் வெள்ள நீர் குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். முகாம்களில் இருந்த மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பிவிட்டனர்.

மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் ஆந்திரம் மற்றும் தெலங்கானாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார். பின்னர், வெள்ளப் பாதிப்புகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் முதல் தகவல் அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024