ஆனந்த் அம்பானி திருமணத்தில் ஜான்சினாவின் மாஸ் என்ட்ரி

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

Anant Ambani-Radhika Merchant Wedding: ஆனந்த் அம்பானி திருமணத்தில் ஜான்சினாவின் மாஸ் எண்ட்ரி… ட்ரெண்டான வீடியோ!ஜான் சீனா

ஜான் சீனா

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சென்ட் திருமணத்தில் பங்கேற்றுள்ள WWE மல்யுத்த வீரர் ஜான்சீனா ஃபோட்டோ ஷூட்டின்போது செய்த சம்பவம் ட்ரெண்டாகி வருகிறது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் திருமணம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்கள், திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வருகை தந்துள்ளனர்.

விளம்பரம்

திருமண கொண்டாட்டங்கள் இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகின்றன. முக்கிய திருமண சடங்குகள் இன்று (ஜூலை 12) சுப விவா என்றழைக்கப்படும் திருமண விழாவுடன் தொடங்கியுள்ளது.

இந்திய பாரம்பரிய ஆடைகளுடன் விழா நடைபெறும் நிலையில், ஜூலை 13ஆம் தேதி சுப ஆசீர்வாத நாளாக இருக்கும். இந்த விழாவிலும் இந்திய பாரம்பரிய ஆடையுடன் விழா நடைபெறும் நிலையில், ஜூலை 14ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும்.

திருமண கொண்டாட்டத்தில் மல்யுத்த வீரர் ஜான்சீனா கலந்து கொண்டார். அவருடன் ஏராளமான பிரபலங்கள் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இளம்நீல வண்ண இந்திய பாரம்பரிய உடையில் ஜான்சீனா பங்கேற்றார்.

விளம்பரம்

மல்யுத்த போட்டிகளின்போது You Cant see me என்று கூறியவாறு, தனது வலது கையை ஆட்டுவார். அதனை இன்று ஃபோட்டோ ஷூட்டின்போது ஜான்சீனா ரீ கிரியேட் செய்தார். இது தொடர்பான வீடியோ இன்று இந்தியாவை தாண்டி பல நாடுகளில் ட்ரெண்டானது.

#WATCH | Professional wrestler and actor, John Cena arrives at Jio World Convention Centre for Anant Ambani and Radhika Merchant’s wedding, in Mumbai pic.twitter.com/Ok20HfaSe8

— ANI (@ANI) July 12, 2024

விளம்பரம்

ஆனந்த் அம்பானியின் திருமண கொண்டாட்டத்திற்கான அனைத்து நிகழ்ச்சிகளும் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் நடைபெறும். முக்கிய திருமண நிகழ்ச்சிகள் மற்றும் சடங்குகள் பாரம்பரிய வேத இந்து சடங்குகளின்படி நடைபெறும்.

இதையும் படிங்க – Anant Ambani-Radhika Merchant Wedding : சஞ்சய் தத் முதல் ஏ.ஆர்.ரகுமான் வரை… ஆனந்த் அம்பானி திருமணத்தில் குவிந்த திரை பிரபலங்கள்!விளம்பரம்

முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜாம்நகரில் நடைபெற்ற அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் ஜோடியின் திருமணத்திற்கு முந்தைய விழாக்களில் உலக வணிகத் தலைவர்கள், மாநிலத் தலைவர்கள், ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Anant Ambani
,
ANANT AMBANI RADHIKA MERCHANT WEDDING CELEBRATIONS

You may also like

© RajTamil Network – 2024