ஆனந்த் அம்பானி திருமணத்தில் கலக்கல் டான்ஸ் ஆடிய ரஜினிகாந்த்…

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset

Anant Ambani-Radhika Merchant Wedding: ஆனந்த் அம்பானி திருமணத்தில் கலக்கல் டான்ஸ் ஆடிய ரஜினிகாந்த்… வியப்பில் ரசிகர்கள்!ஆனந்த் அம்பானியுடன் இணைந்து நடனமாடும் ரஜினிகாந்த்.

ஆனந்த் அம்பானியுடன் இணைந்து நடனமாடும் ரஜினிகாந்த்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் திருமணம் நடைபெறுகிறது.

இதில் பங்கேற்பதற்காக இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்கள், திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வருகை தந்துள்ளனர். திருமண கொண்டாட்டங்கள் இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகின்றன. முக்கிய திருமண சடங்குகள் இன்று (ஜூலை 12) சுப விவா என்றழைக்கப்படும் திருமண விழாவுடன் தொடங்கியுள்ளது.

விளம்பரம்

இந்திய பாரம்பரிய ஆடைகளுடன் விழா நடைபெறும் நிலையில், ஜூலை 13ஆம் தேதி சுப ஆசீர்வாத நாளாக இருக்கும். இந்த விழாவிலும் இந்திய பாரம்பரிய ஆடையுடன் விழா நடைபெறும் நிலையில், ஜூலை 14ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற திருமண கொண்டாட்டத்தில் பங்கேற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மணமகன் ஆனந்த் அம்பானியுடன் இணைந்து இந்தி பாடல் ஒன்றுக்கு கலக்கலான டான்ஸ் ஆடினார். ரஜினிகாந்த்தை இந்த மாதிரியான தருணத்தில் யாரும் பார்த்தது கிடையாது என்பதால் ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

விளம்பரம்

#Rajnikanth and #AnilKapoor dancing away with #AnantAmbani at the latter’s wedding with #RadhikaMerchant today.#Trendingpic.twitter.com/lkJNnFf4zf

— Filmfare (@filmfare) July 12, 2024

விளம்பரம்

தற்போது ரஜினியின் இந்த டான்ஸ் வீடியோ இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. திருமண கொண்டாட்டத்திற்கான அனைத்து நிகழ்ச்சிகளும் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் நடைபெறும். முக்கிய திருமண நிகழ்ச்சிகள் மற்றும் சடங்குகள் பாரம்பரிய வேத இந்து சடங்குகளின்படி நடைபெறும்.

இதையும் படிங்க – Anant Ambani-Radhika Merchant Wedding : அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் விழா – 3 நாட்கள் என்னென்ன கொண்டாட்டங்கள்! முழு விவரம்விளம்பரம்

முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜாம்நகரில் நடைபெற்ற அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் ஜோடியின் திருமணத்திற்கு முந்தைய விழாக்களில் உலக வணிகத் தலைவர்கள், மாநிலத் தலைவர்கள், ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Anant Ambani
,
ANANT AMBANI RADHIKA MERCHANT WEDDING CELEBRATIONS

You may also like

© RajTamil Network – 2024