Friday, September 20, 2024

ஆனையூட்டு விழா – யானைகளுக்கு அன்னாசிப்பழங்களை உட்டி விட்ட சுரேஷ் கோபி.

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

ராணி அன்னாசிப்பழங்களை வெளுத்துகட்டிய யானைகள் – கேரளாவில் ஆனையூட்டு விழா கோலாகலம்…ஆனையூட்டு விழா

ஆனையூட்டு விழா

மலையாள மாதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதங்களில் ஒன்றான கர்கிடகம் என அழைக்கப்படுகிற ஆடி மாதம் தொடங்கியுள்ள நிலையில், கேரளாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ‘ஆனையூட்டு’ எனப்படும் யானைகளின் விருந்து விழா நடைபெற்றது. திருச்சூர் வடக்குநாதன் கோயிலில் நடைபெறும் இந்த திருவிழா கோலாகலகமாக நடைபெற்றது.
ஆனையூட்டு திருவிழாவானது வடக்குநாத கோயிலின் இரண்டாவது முக்கிய பெரிய திருவிழா என சொல்லப்படுகிறது

இந்த நிலையில் வடக்குநாத க்ஷேத்திரத்தில் உள்ள சுமார் 60 யானைகளுக்கு சமீபத்தில் ராஜ விருந்து அளிக்கப்பட்டது. திரிசூரில் உள்ள வடக்குநாத கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆனையூட்டு திருவிழாவில், இந்த முறை யானைகளுக்கு வழக்கமாக அளிக்கப்படும் மற்ற சுவையான உணவுகளைத் தவிர, திரிபுராவின் புகழ்பெற்ற GI-குறியிடப்பட்ட ராணி அன்னாசிப்பழங்கள் அளிக்கப்பட்டன.

விளம்பரம்

மக்களவை பாஜக எம்.பி-யான பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத் துறை இணையமைச்சர் சுரேஷ் கோபி தலைமையில் இந்த உற்சாகமான புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. வடக்குநாதன் க்ஷேத்திரம் அல்லது வடக்குநாதன் கோயில் என்பது சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புகழ்பெற்ற இந்து ஆலயமாகும். இது கேரளாவின் திருச்சூர் நகரில் அமைந்துள்ளது மற்றும் தென்னிந்தியாவின் பழமையான மற்றும் மிக முக்கியமான சிவன் கோவில்களில் ஒன்றாகும்.

திரிபுராவின் புகழ்பெற்ற GI-குறியிடப்பட்ட ராணி அன்னாசிப்பழங்கள்

புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவின் முக்கிய இடமான கோவிலை சுற்றியுள்ள தேக்கிங்காடு மைதானத்தில் இந்த ஆனையூட்டு விழா நடைபெற்றது. யானைகளுக்கு அன்னதானம் வழங்கும் இந்த விழாவில் அலங்காரம் செய்யப்படாத யானைகளுக்கு ஏராளமான மக்கள் உணவளித்து வழிப்பட்டனர்.

விளம்பரம்

இதனிடையே ஆனையூட்டு விழாவின் ஒருபகுதியாக யானைகளுக்கு திரிபுரா அன்னாசி பழத்தை கொடுத்த பின் பேசிய எம்.பி.சுரேஷ் கோபி, இது வெறும் உபசரிப்பு அல்ல, அன்னாசிப்பழ உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் திரிபுரா மாநிலத்தின் முன்னேற்றம் அவர்களின் அர்ப்பணிப்புக்கு சான்றாகும். திரிபுராவின் மிகச்சிறந்த ராணியான அன்னாசிப்பழங்களை இங்கே பகிர்வது அன்பு மற்றும் மரியாதையை வெளிப்படுத்தும் செயலாகும், இது இரு மாநிலங்களுக்கிடையேயான பிணைப்பை பலப்படுத்துகிறது என தெரிவித்தார்.

இதனிடையே ஆனையூட்டு விழாவின் ஒருபகுதியாக யானைகளுக்கு திரிபுரா அன்னாசி பழத்தை கொடுத்த பின் பேசிய எம்.பி.சுரேஷ் கோபி, இது வெறும் உபசரிப்பு அல்ல, அன்னாசிப்பழ உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் திரிபுரா மாநிலத்தின் முன்னேற்றம் அவர்களின் அர்ப்பணிப்புக்கு சான்றாகும். திரிபுராவின் மிகச்சிறந்த ராணியான அன்னாசிப்பழங்களை இங்கே பகிர்வது அன்பு மற்றும் மரியாதையை வெளிப்படுத்தும் செயலாகும், இது இரு மாநிலங்களுக்கிடையேயான பிணைப்பை பலப்படுத்துகிறது என தெரிவித்தார்.

விளம்பரம்

அன்னாசிப்பழ உற்பத்தியில் செழித்தோங்கும் மாநிலமாக உள்ள திரிபுரா, இந்தியாவின் மொத்த அன்னாசி உற்பத்தியில் 8.5% பங்கை கொண்டுள்ளது. திரிபுரா அரசின் மூத்த அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த ‘இனிப்பு பரிமாற்றம்’ திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா மற்றும் அமைச்சர் சுசந்தா சவுத்ரி ஆகியோரால் சாத்தியமானது. திரிபுராவின் சுவையான அன்னாசிப்பழங்கள் கேரளாவிற்கு ஃபிரெஷ்ஷாகவும், சரியான நேரத்தில் வருவதையும் உறுதி செய்ததற்காக அகர்தலா முனிசிபல் கார்ப்பரேஷன் மேயர் மற்றும் 7 ராம் நகர் எம்.எல்.ஏ., தீபக் மஜூம்தரின் ஆகியோரின் முயற்சிகளுக்கு அதிகாரிகள் நன்றி தெரிவித்தனர்.

விளம்பரம்

கேரளாவின் முக்கிய நிகழ்வான ஆனையூட்டில் Queen Pineapple இடம்பெற்றது, இந்த ரக அன்னாசியை தேசிய அளவில் பிரபலமாக்கும் என்றும், இதன் தனித்துவமான சுவை மற்றும் அருமையான தரம் ஆகியவற்றை தேசிய அளவில் வெளிப்படுத்தி, திரிபுரா மாநில விவசாயிகளின் வருமானம் மற்றும் ஏற்றுமதி திறனை அதிகரிக்கச் செய்யும் என்றும் திரிபுரா அரசு எதிர்பார்க்கிறது. பிரம்மாண்டமான விழாக்களில் பங்கேற்று சூழலை இனிமையாக்கும் கம்பீரமான யானைகளின் உணவில் திரிபுரா மாநிலத்தின் ராணி அன்னாசிப்பழங்களை அறிமுகப்படுத்தியது மரியாதை மற்றும் கவனிப்பின் சிறந்த அடையாளமாக பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

திரிபுரா விவசாயிகள் மற்றும் அம்மாநில அரசின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பதில் அமைச்சர் சுரேஷ் கோபி பெருமிதம் கொண்டுள்ளார். அடுத்தடுத்த நடவடிக்கைகள் மூலம் ராணி அன்னாசிக்கான சந்தையை கேரளா, தென்னிந்தியா மற்றும் மேற்கு ஆசியா என விரிவுபடுத்த முடியும் என்றும் நம்புகிறார். யானைகள் இந்த சுவையான அன்னாசியை சுவைத்த போது ஒன்று தெளிவாகத் தெரிந்தது.

இனிமையான விருந்து பல வடிவங்களில் வரலாம். UNESCO உலகப் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் சேர்க்க இந்தியத் தொல்லியல் ஆய்வால் (ASI) பரிந்துரைக்கப்பட்ட 14 தளங்களில், கேரள கட்டிடக்கலை பாணியின் பாரம்பரிய உதாரணமாக உள்ளது வடக்குநாத கோயில். பழங்கால கேரளாவில் உள்ள 108 சிவன் கோயில்களில் வடக்குநாத கோயிலும் ஒன்று. உள்ளூர் புராணங்களின்படி, விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமரால் கட்டப்பட்ட முதல் கோயில் இது என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Elephant
,
Festival
,
kerala
,
Pineapple

You may also like

© RajTamil Network – 2024