ஆன்லைன் ரம்மியால் பறிபோன பணம்… டிரைவர் எடுத்த சோக முடிவு

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

ஆன்லைன் ரம்மியால் பறிபோன பணம்… குடும்பத்துடன் கார் டிரைவர் எடுத்த சோகமான முடிவு!குடும்பத்தினருடன் தற்கொலை

குடும்பத்தினருடன் தற்கொலை

கர்நாடகாவில் ஆன்லைன் ரம்மியில் பல லட்ச ரூபாயை இழந்த துக்கத்தில் கார் டிரைவர் தனது மகளைக் கொலை செய்து, மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். ஆன்லைன் ரம்மியால் பறிபோன குடும்பத்தின் சோக பின்னணி என்ன?

கடன் வாங்கிய ஆன்லைன் ரம்மி விளையாடியதில் பல லட்ச ரூபாயை கார் டிரைவர் பறிகொடுத்துள்ளார். கடன் கொடுத்தவர்கள் தொல்லை கொடுக்க விபரீத முடிவை எடுத்துள்ளனர். மகளை கால்வாயில் வீசி கொலை செய்து, மனைவியுடன் தானும் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். கடைசி நிமிடத்தில் நடந்தது என்ன?

விளம்பரம்

கர்நாடகாவின் ஹாசன் மாவட்டம் சன்னராயப்பட்டினத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ். இவருக்கு ஸ்வேதா என்ற மனைவியும், 13 வயதில் நாகஸ்ரீ என்ற மகளும் இருந்தனர். ஸ்வேதா தனியார் மருத்துவமனையில் மருத்துவராக வேலை பார்தார். ஸ்ரீனிவாஸ், பெங்களூருவில் கார் டிரைவராக வேலைப் பார்த்தார்.

கொரோனாவுக்கு பிறகு சொந்த ஊருக்கு வந்தவர், ஆன்லைன் ரம்மியில் பணம் கட்டி விளையாடி சிறிய தொகையை எடுத்துள்ளார். பண ஆசை கண்ணை மறைக்க ரம்மியில் விளையாடுவதை முழு நேர தொழிலாக மாற்றி உள்ளார். பெரிய தொகையை பெட் கட்டி விளையாட சில முறை லாபமும் பலமுறை நஷ்டமும் அடைந்துள்ளார்.

விளம்பரம்

விட்டதை எப்படியோ பிடித்தாக வேண்டும் என்ற நினைப்பில் கடன் வாங்கி ரம்மி விளையாடியுள்ளார். அதில் பல லட்ச ரூபாயை இழந்துள்ளார். கடன் சுமை அதிகரித்ததால் கடன் வழங்கியவர்கள் அழுத்தம் கொடுத்துள்ளார். இதனால் மனமுடைந்த ஸ்ரீனிவாஸ் தனது மனைவியிடம் கூறி அழுது புலம்பியுள்ளார்.

அப்போது இருவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற விபரீத முடிவை கையில் எடுத்துள்ளனர். 13 வயது மகளை விட்டு செல்ல மனமில்லாமல் அவரின் உயிரையும் பறிக்க முடிவெடுத்ததாகக் கூறப்படுகிறது. பாகூர், முட்லாபுரா கிராமம் அருகே உள்ள ஹேமாவதி கால்வாயில் மகளை வீசி கொலை செய்துவிட்டுப் பெற்றோரும் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

விளம்பரம்

ஸ்ரீனிவாஸ் – ஸ்வேதா தம்பதியின் உடல்களை மீட்ட போலீசார் உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் சிறுமி நாகஸ்ரீயின் உடலை தேடி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார் ஆன்லைன் ரம்மியில் பணத்தைப் பறிகொடுத்து விபரீத முடிவா? இல்லை வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் முடிவிலே மூவரின் மர்ம மரணங்கள் குறித்து தெரியவரும்.

இதையும் படிங்க: காதல் விவகாரம்: இளைஞரின் குடும்பத்தினர் மீது பெண் வீட்டார் கொடூர தாக்குதல்!விளம்பரம்

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து ஒரே குடும்பத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Crime News
,
Karnataka

You may also like

© RajTamil Network – 2024