ஆப்கன்-நியூசிலாந்து டெஸ்ட்: 3-வது நாள் ஆட்டமும் மழையால் ரத்து!

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

ஆப்கானிஸ்தான்-நியூசிலாந்து இடையேயான ஒரேயொரு டெஸ்ட் போட்டியின் 3-வது நாள் ஆட்டமும் மழையால் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் ஆப்கானிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதும் ஒரேயொரு டெஸ்ட் போட்டியை ஆப்கானிஸ்தான் சார்பில் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது.

இந்தப் போட்டி செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கியது. ஆரம்பம் முதலே மழைக் குறுக்கிட்டதால் டாஸ்கூட போடமுடியாத நிலை ஏற்பட்டது.

3 நாள்கள் ஆன பின்பும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்தப் போட்டி முழுமையாக ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மழையால் பாதிக்கப்பட்ட நொய்டா மைதானம்

ஒருவேளை மழை குறைந்தால் நாளை 98 ஓவர்களுடன் 4-வது நாள் தொடங்கும். ஆனால், மழையின் தீவிரம் அதிகமானால் போட்டி முழுமையாக ரத்து செய்யப்படும்.

மைதானம் முழுவதும் மழை நீர் தேங்கி குட்டை போல் காட்சியளிக்கிறது. மைதானத்தை உலர வைக்க இந்திய கிரிக்கெட் வாரியம் போதுமான உபகரணங்களை வழங்கியுள்ளது.

மழையிலிருந்து மைதானத்தை காக்க தில்லி அருண் ஜேட்லி மைதானத்தில் இருந்து அதிகளவிலான மழை கவர்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதுவரையிலும் 7 ஆட்டங்கள் மட்டும் மழையால் 5 நாள்களும் பாதிக்கப்பட்டு இருகின்றன. இதற்கு முன்னதாக 1998 ஆம் ஆண்டில் நியூசிலாந்து அணிக்கு டியூண்டின் நடைபெற்ற ஆட்டத்தில் 5 நாள்களும் மழையால் பாதிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டது.

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தால் 2017 ஆம் ஆண்டில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆப்கானிஸ்தான் அணியின் 10 ஆவது டெஸ்ட் போட்டி இதுவாகும்.

இந்த இரு நாடுகளும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது இதுவே முதல்முறையாகும்.

இந்த டெஸ்ட் போட்டி முடிவுகள் ஐஐசியின் டெஸ்ட் சாம்பியன்ஸிப்பில் எடுத்துக்கொள்ளப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024