Thursday, October 31, 2024

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல்

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்திற்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டு கோர்ட்டு காவலில் உள்ளனர். கைதான திருவேங்கடம் என்ற ரவுடி போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டு வீழ்த்தப்பட்டார்.

இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு தற்போது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அத்துடன், ஆம்ஸ்ட்ராங் மனைவி, உறவினர்கள் வசிக்கும் அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்புக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

You may also like

© RajTamil Network – 2024