ஆம்ஸ்ட்ராங் கொலை: கைதான அஞ்சலை மேலும் ஒரு வழக்கில் கைது

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் கைதான அஞ்சலை, மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டார்.

திரு.வி.க.நகர்,

தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புளியந்தோப்பை சேர்ந்த பா.ஜனதா முன்னாள் நிர்வாகி அஞ்சலை (வயது 48) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் புதுப்பேட்டை திருவேங்கடம் தெருவை சேர்ந்த முகமது அசாருதீன் (37) கடந்த மே மாதம் 9-ம் தேதி பேசின் பிரிட்ஜ் போலீசில் புகார் ஒன்றை கொடுத்திருந்தார்.

அதில் 'நான் கேட்டரிங் வேலை செய்து வருகிறேன். தொழில் விருத்திக்காக எனக்கு பணம் தேவைப்பட்டது. இம்ரான் என்பவர் புளியந்தோப்பை சேர்ந்த அஞ்சலை, சங்கீதா, சந்திரன், திருநங்கை ஆலிநா ஆகியோரை அறிமுகப்படுத்தினார். அவர்களிடம் இருந்து ரூ,30 லட்சத்தை வாங்கி அதை பல கட்டங்களாக ரூ,66 லட்சம் வரை திருப்பிக் கொடுத்தேன். மேலும் பணம் வேண்டும் என அஞ்சலை உள்பட மேற்கண்ட 5 பேரும் என்னை மிரட்டி கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்' என கூறியிருந்தார்.

புகாரைத் தொடர்ந்து பேசின் பிரிட்ஜ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஞ்சலையை தேடி வந்த நிலையில் தலைமறைவாக இருந்த அஞ்சலை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். முகமது அசாருதீன் கொடுத்த புகாரின் பேரில் நேற்று கந்துவட்டி வழக்கில் எழும்பூர் குற்றவியல் கோர்ட்டில் அஞ்சலை ஆஜர்படுத்தப்பட்டார்.

அதைத்தொடர்ந்து அவர் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சரித்திர பதிவேடு குற்றவாளியான கந்துவட்டி ராணி அஞ்சலை மீது ஏராளமான வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024