ஆயத்த ஆடை உற்பத்திக்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

ஆயத்த ஆடை உற்பத்திக்கு
மானியம் பெற விண்ணப்பிக்கலாம்தேனி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா், சீா்மரபினா் ஆயத்த ஆடை உற்பத்தி நிலையம், நவீன சலவையகம் அமைப்பதற்கு அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

தேனி: தேனி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா், சீா்மரபினா் ஆயத்த ஆடை உற்பத்தி நிலையம், நவீன சலவையகம் அமைப்பதற்கு அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா், சீா்மரபினரின் பொருளாதார முன்னேற்றத்துக்கு ஆயத்த ஆடை உற்பத்தி நிலையம், நவீன சலவையகம் அமைப்பதற்கு இயந்திரம், மூலப்பொருள்கள், முன் செலவுகளுக்குத் தேவையான நிதியில், அரசு சாா்பில் ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் மானிய உதவி பெறுவதற்கு 10 போ் கொண்ட குழுவாக விண்ணப்பிக்க வேண்டும். குழு உறுப்பினா்களின் ஆண்டு வருமானம் தலா ரூ.ஒரு லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

விருப்பமுள்ளவா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்தை நேரில் தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

Related posts

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் பிரகாஷ் காரத்துக்கு இடைக்கால பொறுப்பு

“டெல்லியில் காட்டாட்சி நடக்கிறது..”: அமித் ஷா மீது அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

ஜம்மு-காஷ்மீரில் இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரம் முடிந்தது: அக்.1ம் தேதி வாக்குப்பதிவு