Wednesday, September 25, 2024

ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி: முதல்வர் ஸ்டாலின்

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படம் பார்த்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் நடித்த சிறுவன் பசியால் தவிக்கும் காட்சியை குறிப்பிட்டு, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி அடைவதாக அவர் தெரிவித்துள்ளார்.

வாழை திரைப்படம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்ததாவது:

“உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் வாழையை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி மாரி செல்வராஜுக்கு அன்பின் வாழ்த்துகள்.

பசியுடன் சிவனைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி.

பசிக்கொடுமையை எந்தச் சிவனைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன்.

காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம். தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்துவரும் மாரி செல்வராஜுக்கு மீண்டும் வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் #வாழை-யை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி @mari_selvaraj அவர்களுக்கு அன்பின் வாழ்த்துகள்
பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார்…

— M.K.Stalin (@mkstalin) September 2, 2024

உண்மை சம்பவத்தின் சில பக்கங்கள்… வாழை – திரை விமர்சனம்!

முதல்வர் ஸ்டாலினின் வாழ்த்துச் செய்தியை பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ள இயக்குநர் மாரி செல்வராஜ்,

“என் முதல் படமான பரியேறும் பெருமாளிலிருந்து கர்ணன் மாமன்னனை தொடர்ந்து இன்று வாழை வரை என் அத்தனை படங்களையும் பார்த்துவிட்டு உடனே அழைத்து பெரும் ப்ரியத்தோடு என் படைப்பையும் என் உழைப்பையும் பெரும் நம்பிக்கையோடு கொண்டாடி வரும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024