ஆவணி அவிட்டம்: திருத்தணி முருகன் கோவில் இன்று 3 மணி நேரம் மூடப்படும்

by rajtamil
0 comment 25 views
A+A-
Reset

திருத்தணி முருகன் கோவில் இன்று 3 மணி நேரம் மூடப்படும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தணி,

திருத்தணி முருகன் கோவிலில் நேற்று விடுமுறை தினத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக காலை 6 மணி முதல் இரவு 8 45 மணி வரை நடை திறந்திருக்கும்.

இந்த நிலையில், இன்று (திங்கட்கிழமை) ஆவணி அவிட்டம் என்பதால் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை கோவில் நடை மூடப்பட்டு இருக்கும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நேரத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் கோவிலில் பணிபுரியும் அனைத்து அர்ச்சகர்கள் மற்றும் தலைமை குருக்கள் என 75-க்கும் மேற்பட்டோர் பூணூல் மாற்றம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மாலை 3 மணிக்கு மேல் கோவில் நடை திறந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024