ஆஸி. டாஸ் வென்று பந்துவீச்சு: மழையால் 43 ஓவர்களாக குறைப்பு!

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

ஆஸி-இங்கிலாந்து 4-வது ஒருநாள் போட்டி மழையால் தாமதமானதால் 43 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்காவது ஒருநாள் போட்டி இங்கிலாந்தின் லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.

5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வியைத் தழுவிய இங்கிலாந்து அணி 3-வது ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால் டக்வொர்த் லீவிஸ் முறையில் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனால், 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் இருக்கிறது.

90 நிமிடங்கள் தொடர்ந்து மழை பெய்ததால் டாஸ்கூட போட முடியாமல் தாமதமானது. ஒருமணி நேரத்துக்கும் மேலாக 17 மிமீட்டர் மழை பெய்துள்ளது.

தற்போது மழையின் பாதிப்பு குறைந்துள்ளது. இந்த நிலையில் லாட்ஸ் கிரிக்கெட் மைதான எக்ஸ் தளப் பக்கத்தில் உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணிக்கு போட்டிக்கான டாஸ் போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், 50 ஓவர்கள் கொண்ட போட்டி 43 ஓவர்களாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்சல் மார்ஷ் முதலில் பந்து வீசுவதாக தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய நட்சத்திர பேட்டர் டிராவிஸ் ஹெட் மற்றும் ஆடம் ஜம்பா ஆகியோரும் நான்காவது ஒருநாள் போட்டிக்காக அணிக்கு திரும்பியுள்ளனர்.

ஆஸ்திரேலியா அணி:டிராவிஸ் ஹெட், மிட்சல் மார்ஷ் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லாபுசேன், அலெக்ஸ் கேரி, கிளென் மேக்ஸ்வெல், சீன் அபோட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்

இங்கிலாந்து அணி:பில் சால்ட், பென் டக்கெட், வில் ஜாக்ஸ், ஹாரி ப்ரூக் (கேப்டன்), ஜேமி ஸ்மித் , லியாம் லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெத்தேல், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், மேத்யூ பாட்ஸ், அடில் ரஷித்

You may also like

© RajTamil Network – 2024