Wednesday, September 25, 2024

ஆஸ்திரேலியா தொடர்: பட்லர் தலைமையில் இங்கிலாந்து அணி அறிவிப்பு!

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஓடிஐ, டி20 தொடருக்கான பட்லர் தலைமையில் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு நாள் தொடர்களில் இங்கிலாந்து அணி செப்டம்பரில் விளையாடவுள்ளது. இந்தப் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளன. அதற்கான வீரர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியின் டி20 தொடரில் இதுவரை தேசிய அணியில் இடம்பெறாத புதிய வீரர்கள் 5 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பேட்டரான ஜோர்டன் காக்ஸ், ஆல் ரவுண்டர்கள் ஜேகன் பெத்தேல் மற்றும் டான் மௌஸ்லி, வேகப்பந்து வீச்சாளர்களான ஜோஷ் ஹல், ஜான் டர்னர் ஆகியோர் டி20 தொடரில் புதிய வீரர்களாக களமிறங்க இருக்கின்றனர்.

கஸ் அட்கின்சன், ஹாரி புரூக், மேத்யூ போட்ஸ் மற்றும் ஜேமி ஸ்மித் அனைவரும் தற்போது இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஈடுபட்டுள்ளனர். இங்கிலாந்து ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 க்கான வீரர்கள் தேர்வை தீவிரப்படுத்தியுள்ளதால் இவர்கள் அனைவரும் ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பிறகு முதல் முறையாக ஜோஃப்ரா ஆர்ச்சர் 50 ஓவர் அணிக்கு திரும்பி இருக்கிறார்.

ஆர்ச்சர், பெத்தேல், பிரைடன் கார்ஸ், ஹல், வில் ஜாக்ஸ், அடில் ரஷித், பில் சால்ட், ரீஸ் டோப்லி மற்றும் டர்னர் ஆகியோர் இரு அணிகளிலும் இடம்பெற்றுள்ளனர். ஜோஸ் பட்லர் ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கும் கேப்டனாக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி20 தொடருக்கான அணி:ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேக்கப் பெத்தேல், பிரைடன் கார்ஸ், ஜோர்டான் காக்ஸ், சாம் கர்ரன், ஜோஷ் ஹல், வில் ஜாக்ஸ், லியாம் லிவிங்ஸ்டன், சாகிப் மஹ்மூத், டான் மௌஸ்லி, அடில் ரஷித், பில் சால்ட், ரீஸ் டோப்லி, ஜான் டர்னர்.

ஒருநாள் தொடருக்கான அணி:ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜோஷ் ஹல், வில் ஜாக்ஸ், மேத்யூ பாட்ஸ், அடில் ரஷித், ஃபில் சால்ட், ஜேமி ஸ்மித், ரீஸ் டோப்லி, ஜான் டர்னர்

You may also like

© RajTamil Network – 2024