ஆஸ்திரேலியா – வங்காளதேசம் ஆட்டம்: மழையால் தற்காலிகமாக நிறுத்தம்

by rajtamil
0 comment 27 views
A+A-
Reset

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 140 ரன்கள் அடித்தது.

ஆண்டிகுவா,

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் சூப்பர் 8 சுற்றின் 4-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – வங்காளதேசம் அணிகள் விளையாடி வருகின்றன.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நஜ்முல் ஹொசைன் 41 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக கம்மின்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 11.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் அடித்திருந்தபோது, ஆட்டத்தின் இடையே மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

வார்னர் 53 ரன்களுடனும், மேக்ஸ்வெல் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா வெற்றி பெற இன்னும் 52 பந்துகளில் 41 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024