இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி

by rajtamil
0 comment 29 views
A+A-
Reset

புதுடெல்லி,

பொருளாதார ஏற்ற இறக்கங்களை சமாளிக்கவும், விலைவாசியை கட்டுக்குள் வைக்கவும் சர்வதேச நாடுகள் பிற நாடுகளிடம் இருந்து அதிகப்படியான தங்கத்தை வாங்கி இருப்பு வைத்து வருகின்றன. கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவிடம் 803.6 டன் தங்கம் இருப்பில் இருந்தது. இது நடப்பாண்டின் முதல் 4 மாத இறுதியில் 827.6 டன்னாக அதிகரித்துள்ளது. இதில் 413 டன் தங்கம் வெளிநாடுகளில் இருப்பில் வைக்கட்டுள்ளது.

குறிப்பாக சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் இருந்தே இங்கிலாந்து வங்கியில் இந்தியா தங்கத்தை சேமித்து வருகிறது. இதற்காக குறிப்பிட்ட கட்டணமும் செலுத்தப்படுகிறது. இந்நிலையில், வெளிநாடுகளில் உள்ள இந்தியாவின் தங்க இருப்பில் 4-ல் ஒரு பகுதி அதாவது 100 டன் எடையுள்ள தங்கத்தை இங்கிலாந்து மத்திய வங்கியில் இருந்து ரிசர்வ் வங்கி இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளது.

இந்த தங்கம் பலத்த பாதுகாப்புடன் பிரத்யேக விமானம் மூலமாக இந்தியாவிற்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டுள்ளது. தங்க இறக்குமதிக்கு மத்திய அரசிடம் இருந்து ரிசர்வ் வங்கி சுங்க வரி விலக்கு பெற்ற நிலையில், மாநிலங்களுடன் பகிரப்படுவதால் ஜி.எஸ்.டி. மட்டும் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024