இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட்: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு

by rajtamil
0 comment 19 views
A+A-
Reset

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிரேக் பிராத்வைட் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

பர்மிங்காம்,

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இங்கிலாந்து 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் இன்று நடைபெறுகிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிரேக் பிராத்வைட் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இங்கிலாந்து:

ஜாக் கிராலி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ்(கேட்ச்), ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், மார்க் வூட், சோயிப் பஷீர்.

வெஸ்ட் இண்டீஸ்:

கிரேக் பிராத்வைட் , மைக்கேல் லூயிஸ், கிர்க் மெக்கென்சி, அலிக் அதானாஸ், கவெம் ஹாட்ஜ், ஜேசன் ஹோல்டர், ஜோசுவா டா சில்வா , அல்சாரி ஜோசப், குடகேஷ் மோட்டி, ஷமர் ஜோசப், ஜெய்டன் சீல்ஸ்.

You may also like

© RajTamil Network – 2024