Friday, September 20, 2024

இங்கிலாந்து, வங்காளதேசம் வெற்றி: டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன..?

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.

துபாய்,

இங்கிலாந்து அணி இலங்கைக்கு எதிராகவும், வங்காளதேசம் பாகிஸ்தானுக்கு எதிராகவும் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. அதில் முதல் 3 இடங்களில் முறையே இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மாற்றமின்றி தொடருகின்றன.

இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக 7-வது இடத்தில் இருந்த இங்கிலாந்து 4-வது இடத்திற்கும், 8-வது இடத்திலிருந்த வங்காளதேசம் 6-வது இடத்திற்கும் முன்னேறியுள்ளன.

4-வது இடத்தில் இருந்த இலங்கை 5-வது இடத்திற்கும், 5-வது இடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்கா 7-வது இடத்திற்கும், 6-வது இடத்திலிருந்த பாகிஸ்தான் 8-வது இடத்திற்கும் சரிந்துள்ளன. வெஸ்ட் இண்டீஸ் மாற்றமின்றி கடைசி இடத்தில் தொடருகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் விவரம்;

1.) இந்தியா – 68.52 சதவீதம்

2.) ஆஸ்திரேலியா – 62.50 சதவீதம்

3.) நியூசிலாந்து – 50.00 சதவீதம்

4.) இங்கிலாந்து – 41.7 சதவீதம்

5.) இலங்கை – 40.00 சதவீதம்

6.) வங்காளதேசம் – 40.00 சதவீதம்

7.) தென் ஆப்பிரிக்கா – 38.89 சதவீதம்

8.) பாகிஸ்தான் – 30.56 சதவீதம்

9.) வெஸ்ட் இண்டீஸ் – 18.52 சதவீதம்

You may also like

© RajTamil Network – 2024