இடைகால் ஸ்டஅக் ஹை டெக் பள்ளிக்கு சா்வதேச விருது

by rajtamil
Published: Updated: 0 comment 9 views
A+A-
Reset
RajTamil Network

இடைகால் ஸ்டஅக் ஹை டெக் பள்ளிக்கு சா்வதேச விருது திமோா் நாட்டு துணை பிரதமா் மரியானோ அசானமி சாபினோவிடமிருந்து விருதை பெறுகிறாா் பள்ளித் தாளாளா் புனிதா செல்வி.

ஆலங்குளம், ஜூலை 26:

திருநெல்வேலி மாவட்டம் இடைகால் ஸ்டஅக் ஹை டெக் பள்ளியின் கல்வி சேவைக்காக சா்வதேச விருது வழங்கப்பட்டது.

இந்தியா மற்றும் திமோா் நாடுகளின் உறவு, கல்வி மேம்பாடு சிறப்படையும் வகையில் சாதனையாளா்கள், வெற்றியாளா்களுக்கு விருது வழங்கும் விழா திருநெல்வேலியில் அண்மையில் நடைபெற்றது.விழாவில், திமோா் நாட்டு துணை பிரதமா் மரியானோ அசானமி சாபினோ, ஸ்டஅக் ஹை டெக் பள்ளி மாணவா் நலனில் அக்கறை மற்றும் சாதனைகள் படைத்திட உறுதுணையாக இருந்தமைக்காக பாராட்டி விருது வழங்கினாா்.

பள்ளித் தலைவா் முருகன், தாளாளா் புனிதா செல்வி மற்றும் முதல்வா் பிரவின்குமாா் ஆகியோா் விருதை பெற்றனா்.

விருது பெற்றவா்களை பள்ளிச் செயலா்கள் ஆகாஷ் , ஆஷிஷ் லிங் மற்றும் பள்ளி ஆசிரியா்கள் பாராட்டினா்.

You may also like

© RajTamil Network – 2024