Wednesday, September 25, 2024

இதிலும் முறைகேடா? டாப் ரேங்க் எடுத்த காவல்துறை பயிற்சி எஸ்ஐ! மறுதேர்வில்..

by rajtamil
0 comment 20 views
A+A-
Reset

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் பொதுப் பணி ஆணையம் 2021ஆம் ஆண்டு நடத்திய தேர்வில் சிறப்பிடம் பிடித்து எஸ்ஐ பயிற்சி எடுத்து வந்த பலர் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

2021ஆம் ஆண்டு நடந்த தேர்வில் முறைகேடு நடத்தப்பட்டதாக எழுந்த புகாரினைத் தொடர்ந்து, மறு தேர்வு நடத்தப்பட்டதில், அவர்கள் மிகக் குறைந்த மதிப்பெண் எடுத்திருந்தது தெரிய வந்ததையடுத்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ஷோபா ரைகா, ந்தியில் 188.68 மதிப்பெண் எடுத்திருந்ததாகவும், பொது அறிவுப் பாடத்தில் 200க்கு 154 மதிப்பெண் எடுத்தவர் தற்போது முறையே 24 மற்றும் 34 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்ததாகக் கூறுகிறார்கள்.

ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி: முதல்வர் ஸ்டாலின்

ராஜஸ்தான் காவல்துறை அகாதமியில் பயிற்சி பெற்று தேர்வில் தேர்ச்சி பெற்று காவல்துறை ஆய்வாளருக்கான பயிற்சியில் இருக்கும் அனைவரும், அவர்கள் முன்பு எழுதித் தேர்ச்சி அடைந்த அதே வினாத்தாள் கொடுக்கப்பட்டு மறுதேர்வு நடத்தப்பட்டதில், அனைவருமே மிக மோசமான மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

மறுதேர்வுக்கு புதிய வினாத்தாளா?

புதிதாகக் கடினமான வினாத்தாள்கள்கூட தயாரிக்கப்படவில்லை. அவர்கள் ஏற்கனவே எழுதிய அதே வினாத்தாள், எதிர்மறை மதிப்பெண்கள் என எதுவும் கழிக்கப்படவும் இல்லை, அப்போதும் அவர்கள் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

5வது ரேங்க் எடுத்திருந்த ரைகாவுடன், 11வது ரேங்க் எடுத்திருந்த மஞ்சு தேவியும் ஞாயிறன்று கைது செய்யப்பட்டார். இவரும் ஹிந்தியில் 52ம், பொது அறிவில் 71 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்திருந்தார். ஆனால், 2021ஆம் ஆண்டு நடந்த தேர்வில் 183.75ம், 167.89 மதிப்பெண்களும் எடுத்து 351.64 மதிப்பெண் பெற்றிருந்தார்.

இதுபோலவே, 2021 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்த பல தேர்வர்கள் மறுதேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும், பொது அறிவு கேள்விகளில் சில எளிய வினாக்களுக்குக் கூட சிலர் சரியான பதிலளிக்கவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் செப்.6 வரை மழை நீடிக்கும்

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், தற்போது கைதாகியிருக்கும் குற்றவாளிகள் எடுத்த அளவுக்கு மதிப்பெண்களை, கடுமையான தேர்வாகக் கருதப்படும் ராஜஸ்தான் நிர்வாக தேர்வுக்கு (ஆர்ஏஎஸ்) தயாராகி வரும் கடுமையான பயிற்சியில் இருக்கும் தேர்வர்கள் கூட எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாக இருந்தது.

முன்னதாக, 2021ஆம் ஆண்டு காவல்துறை ஆய்வாளர் பணியிடத்துக்கான தேர்வு வினாத்தாளை கசிய விட்ட வழக்கில் ராஜஸ்தான் பொதுப் பணி ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் ராமு ராம் ரைகா, சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், முதலிடம் பிடித்தவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்பட்ட நிலையில்தான் தொடர் கைது சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதனால், ராஜஸ்தான் பொதுப் பணி ஆணையத்தின் பல முக்கிய பொறுப்புகளில் ராமு ராம் ரைகா இருந்துள்ளதால், இதுவரை நடத்தப்பட்ட தேர்வுகளின் உண்மைத்தன்மையும் கேள்விக்குறியாகியிருக்கிறது.

You may also like

© RajTamil Network – 2024