Friday, September 20, 2024

இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான விரைவுச் சாலை – எப்போது தயாராகும்?

by rajtamil
0 comment 27 views
A+A-
Reset

இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான விரைவுச் சாலை – எப்போது தயாராகும்?பாலைவனச் சாலை

பாலைவனச் சாலை

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான விரைவுச் சாலையை 500 கி.மீ., பாலைவன நிலப்பரப்பில் அமைத்து வருகிறது.

டெல்லி மற்றும் மும்பை இடையே நாட்டின் மிக நீளமான விரைவுச் சாலை அமைக்கப்பட்டிருப்பது பலருக்கும் தெரிந்திருக்கும். இந்த நிலையில், பஞ்சாப் – குஜராத் இடையே இரண்டாவது விரைவுச் சாலை அமைக்கப்படுகிறது. இந்த இரண்டு நகரங்களும் பல கிலோ மீட்டர் தூர பாலைவனத்தால் பிரிக்கப்பட்டுள்ளன. அந்த பாலைவனத்தை கடந்துதான், தற்போது விரைவு நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது.

விளம்பரம்

இந்த விரைவு நெடுஞ்சாலை அடுத்த ஆண்டு (2025) டிசம்பரில் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று கூறப்படும் நிலையில், இது செயல்பாட்டுக்கு வந்தால், இரு நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் பாதியாக குறைக்கப்படும் என்றும், பயணச் செலவுகளும் கணிசமாக குறையும் என்றும் கூறப்படுகிறது. அமிர்தசரஸ் – ஜாம் நகர் இடையே தற்போது 1,450 கி.மீட்டராக இருக்கும் பயண தூரம், இந்த விரைவுச் சாலையால் 1,316 கி.மீட்டராக குறையும். இந்த நெடுஞ்சாலையை டிசம்பர் 2025க்குள் முடிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இலக்கு நிர்ணயித்துள்ளது. தொழில்துறை முக்கியத்துவம் வாய்ந்த இந்த விரைவுச் சாலை, ராஜஸ்தான், ஹரியானா முழுவதும் நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் பாலைவனத்தை கடக்கும். இதனால், வணிகம் விரைவாக நடைபெற இந்த சாலை பேருதவியாக இருக்கும்.

விளம்பரம்

அமிர்தசரஸை சுற்றியுள்ள தொழில் மையங்களை குஜராத்தில் உள்ள தொழில் நிறுவனங்களுடன் நேரடியாக இணைப்பதன் மூலம், இணைப்பு மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்த சாலையில் 100 கி.மீ. வேகத்தில் வாகனத்தை இயக்க முடியும் என்பதால், இதன் மூலம் அமிர்தசரஸ் – ஜாம் நகர் இடையிலான பயண தூரம் 26 மணி நேரத்தில் இருந்து, 13 மணி நேரமாக குறையும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க:
அயோத்தி ராமர் கோயில் மேற்கூரையில் மழைநீர் கசிவு… தலைமை அர்ச்சகர் வேதனை!

விளம்பரம்

அமிர்தசரஸ் – ஜாம் நகர் இடையிலான விரைவுச் சாலையா டெல்லி புறநகர் பகுதி மக்களும் பயன்பெறுவார்கள். அத்துடன், பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா மற்றும் குஜராத் மக்களுக்கு நேரடியாக பலன் தரும் என்றும், டெல்லி-கத்ரா விரைவுச் சாலையுடன் இது இணைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அத்துடன், இந்த விரைவுச் சாலை மூலம் காஷ்மீருக்கு எளிதாக செல்ல முடியும் என்றும், அமிர்தசரஸ், பதிண்டா, மோகா, ஹனுமன்நகர், சூரத்கர், பிகானர், நாகூர், ஜோத்பூர், பார்மர், ஜாம்நகர் ஆகிய நகரங்களுக்கு நேரடியாக பலனளிக்கும் என்றும் கூறப்படுகிறது.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
central government
,
Road Safety

You may also like

© RajTamil Network – 2024