Sunday, September 22, 2024

இந்தியாவின் இளம் வயது அமைச்சர்… யார் இந்த ராம் மோகன் நாயுடு?

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

26 வயதில் எம்.பி., 36 வயதில் மத்திய அமைச்சர் – யார் இந்த ராம் மோகன் நாயுடு?ராம் மோகன் நாயுடு

ராம் மோகன் நாயுடு

26 வயதில் எம்.பி.யாக வெற்றிபெற்ற ராம் மோகன் நாயுடு, 36 வயதில் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இளம் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி 3ஆவது முறையாக பதவியேற்றுள்ள நிலையில், அவருடன் 71 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அதில், 36 வயது அமைச்சர் ராம் மோகன் நாயுடுவும் ஒருவர்.

இவர், 1996-1988 இடையே ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்த கே யர்ரான் நாயுடுவின் மகன். பர்டூ பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலில் பட்டம் பெற்ற ராம் மோகன் நாயுடு, லாங் ஐலேண்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றிருக்கிறார். படிப்பை முடித்த பிறகு, சிங்கப்பூரில் பல்வேறு தொழில்களை நடத்தி வந்தார்.

விளம்பரம்

இதனிடையே, கடந்த 2012ஆம் ஆண்டு இவரது தந்தையும், முன்னாள் மத்திய அமைச்சருமான கே யெர்ரன் நாயுடு சாலை விபத்தில் உயிரிழந்ததால், ராம் மோகன் நாயுடு நாடு திரும்பினார். பின்னர் தீவிர அரசியலில் ஈடுபட்ட அவர், 2014 மக்களவைத் தேர்தலில் ஸ்ரீகாகுளம் தொகுதியில் இருந்து தனது 26ஆவது வயதிலேயே எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.

தெலுங்கு தேசம் கட்சி சார்பில் எம்.பி.யான ராம் மோகன் நாயுடு, சந்திரபாபு நாயுடுவுக்கு மிகவும் நெருக்கமானவர். எனவே, தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக பணிபுரிந்த இவர், சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டபோது, டெல்லியில் நாரா லோகேஷ் உடன் இணைந்து பல்வேறு முக்கிய தலைவர்களின் ஆதரவை நாடினார். பல்வேறு நாடாளுமன்ற நிலைக்குழுக்களில் முன் மாதிரியான செயல்பாட்டிற்காக கடந்த 2020ஆம் ஆண்டு சன்சத் ரத்னா விருதும் வாங்கினார்.

இதையும் படிங்க : 27 ஓபிசி அமைச்சர்கள், 11 பெண்கள், 5 சிறுபான்மையினர் : அமைச்சரவையில் யார், யாருக்கு இடம்? – முழு விபரம் இதோவிளம்பரம்

இந்த நிலையில், 2024 மக்களவைத் தேர்தலிலும் தெலுங்கு தேசம் கட்சியில் ஸ்ரீகாகுளம் தொகுதியில் வெற்றிபெற்ற ராம் மோகன் நாயுடு, தனது 36ஆவது வயதிலேயே மோடி அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளார். இதன்மூலம், மோடி அமைச்சரவையில் மிகவும் இளம் வயதில் ஒருவர் அமைச்சராக பொறுப்பேற்றிருப்பது இதுவே முதல்முறையாக மாறியுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Cabinet
,
Lok Sabha Election Results 2024
,
Modi Cabinet
,
Telugu Desam Party

You may also like

© RajTamil Network – 2024