Saturday, September 28, 2024

இந்தியாவில் அதிக கட்டணம் வசூலிக்கும் முதல் 10 டோல்கேட்கள்…

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

இந்தியாவில் அதிக கட்டணம் வசூலிக்கும் முதல் 10 டோல்கேட்கள்… லிஸ்ட் இதோ!டோல்கேட் சிஸ்டம்

டோல்கேட் சிஸ்டம்

ஜூன் 30, 2024 நிலவரப்படி, தேசிய நெடுஞ்சாலைகளில் 983 யூசர் டோல்கேட்கள் செயல்படுகின்றன என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், அவர்களால் சேகரிக்கப்பட்ட கட்டணங்கள் பற்றிய தகவல்கள் உங்களை ஆச்சரியப்படுத்தக்கூடும் என்றும் கூறியுள்ளது. இந்த 10 தேசிய நெடுஞ்சாலை டோல்கேட்கள் FY24-ல் ரூ.3,300 கோடிக்கு மேல் வசூலித்ததாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் டேட்டா தெரிவிக்கின்றன. அதிகாரப்பூர்வ டேட்டாவின்படி, மார்ச் 31, 2024 வரையிலான ஐந்து ஆண்டுகள் வரை இந்த 10 டோல்கேட்களில் ரூ.14,045 கோடி வசூலித்ததாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விளம்பரம்

10. சசரம் டோல்கேட், பீகார்:

பீகாரில் உள்ள சசரம் டோல்கேட் ஆனது 900 கிமீ நீளமுள்ள வாரணாசி-அவுரங்காபாத் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.2,043.8 கோடி வசூல் செய்து கடைசி இடத்தில் உள்ளது என்று சாலை அமைச்சகத்தின் டேட்டாக்கள் தெரிவிக்கின்றன.

9. நவாப்கஞ்ச் டோல்கேட், உத்திர பிரதேசம்:

உத்திர பிரதேசத்தில் உள்ள நவாப்கஞ்ச் டோல்கேட் ஆனது இந்தியாவில் அதிகபட்ச கட்டணம் வசூலிக்கும் முதல் 10 டோல்கேட்களின் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.1,884.5 கோடி வசூல் செய்தது.

விளம்பரம்

8. கிருஷ்ணகிரி தோப்பூர் டோல்கேட் (பாளையம்), தமிழ்நாடு:

தமிழ்நாட்டில் தர்மபுரியில் உள்ள கிருஷ்ணகிரி தோப்பூர் டோல்கேட் ஆனது 154 கிமீ நீளமுள்ள கிருஷ்ணகிரி-தும்பிபாடி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.1,124.2 கோடி வசூல் செய்து இந்த பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது.

7. திகாரியா/ஜெய்ப்பூர் டோல்கேட், ராஜஸ்தான்:

ராஜஸ்தானில் உள்ள திகாரியா/ஜெய்ப்பூர் டோல்கேட் ஆனது இந்தியாவில் அதிகபட்ச கட்டணம் வசூலிக்கும் முதல் 10 டோல்கேட்களின் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.1,161.2 கோடி வசூல் செய்தது.

விளம்பரம்

6. சோரியாசி டோல்கேட், குஜராத்:

குஜராத்தில் உள்ள சோரியாசி டோல்கேட் ஆனது 246 கிமீ நீளமுள்ள பருச்-சூரத் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.1,272.6 கோடி வசூல் செய்து இந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.

5. கராண்டா (கர்னல்) டோல்கேட், ஹரியானா:

ஹரியானா உள்ள கராண்டா (கர்னல்) டோல்கேட் ஆனது 111.5 கிமீ நீளமுள்ள பானிபட்-ஜலந்தர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.1,314.4 கோடி வசூல் செய்து இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

விளம்பரம்

4. பாரஜோர் (பாரா) டோல்கேட், உத்திர பிரதேசம்:

உத்திர பிரதேசத்தில் உள்ள பாரஜோர் (பாரா) டோல்கேட் ஆனது எட்டாவா – சாகேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.1,480.7 கோடி வசூல் செய்து இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.

Also Read |
UPI பேமெண்ட்… மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்!

3. ஜலதுலாகோரி (துலாகர்) டோல்கேட், மேற்கு வங்கம்:

மேற்கு வங்காளத்தில் உள்ள ஜலதுலாகோரி (துலாகர்) டோல்கேட் ஆனது 35 கிமீ நீளமுள்ள தன்குனி-காரக்பூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.1,538.9 கோடி வசூல் செய்து மூன்றாவது இடத்தில் உள்ளது.

விளம்பரம்

2. ஷாஜஹான்பூர் டோல்கேட், ராஜஸ்தான்:

ராஜஸ்தானில் உள்ள ஷாஜஹான்பூர் டோல்கேட் ஆனது 115 கிமீ நீளமுள்ள குர்கான்-கோட்புட்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.1,884.5 கோடி வசூல் செய்து இரண்டாவது இடத்தில் உள்ளது.

1. பர்தானா டோல்கேட், குஜராத்:

குஜராத்தில் உள்ள பர்தானா டோல்கேட் ஆனது நாட்டிலேயே அதிக கட்டணம் வசூலிக்கும் டோல்கேட் என்றும் அறியப்படுகிறது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.2,043.8 கோடி கோடி வசூல் செய்து முன்னிலையில் உள்ளது.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Toll gate
,
Trending

You may also like

© RajTamil Network – 2024