இந்தியாவில் ஐ-போன் 16 ரகங்களின் முதல் நாள் விற்பனை 25% உயர்வு!

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

புதுதில்லி: ஸ்மார்ட்போன் வணிகம் சார்ந்த உலக சந்தையில் தனக்கென கணிசமான பங்கை கொண்டுள்ள ஆப்பிள் நிறுவனத்தின் புதிய அறிமுகமான ஐ-போன் 16 வரிசை அறிதிறன்பேசிகளின் (ஸ்மாா்ட் போன்) விற்பனை இந்தியாவில் வெள்ளிக்கிழமை (செப். 20) தொடங்கிய நிலையில், முதல் நாள் விற்பனை கடந்த ஆண்டைவிட 25 சதவீதம் அதிகமாக நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்மார்ட்போன் வணிகம் சார்ந்த உலக சந்தையில் எவ்வளவோ ஸ்மார்ட் போன்கள் வந்தாலும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன்களுக்கு தனி மதிப்பு இருக்கிறது. அவை செல்வந்தர்களுக்கானவை என பார்க்கப்பட்டாலும், சாமானியர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டது கிடையாது. அதற்கு விலைக்கு ஏற்ற தரம் ஒன்றே காரணம்.

ஒவ்வொரு ஆண்டும் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய அறிமுகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு ஐ-போன் 15 ப்ரோ மற்றும் ஐ-போன் 15 ப்ரோ மேக்ஸ் ரகங்களை அந்த நிறுவனம் முறையே ரூ.1,34,900 மற்றும் ரூ.1,59,900-க்கு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய நிலையில், கடந்த 9 ஆம் தேதி கலிபோர்நியை, சூப்பர்டினோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய அறிமுகமான ஐ-போன் 16 மற்றும் 16 ப்ரோ ரக அறிதிறன்பேசிகளின் (ஸ்மாா்ட் போன்) வெளியிடப்பட்டன.

இந்த நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐ-போன் 16 மற்றும் 16 ப்ரோ ரக அறிதிறன்பேசிகளின் (ஸ்மாா்ட் போன்)விற்பனை இந்தியாவில் வெள்ளிக்கிழமை (செப். 20) தொடங்கியது.

இந்தியாவில், மும்பை மற்றும் தில்லியில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்களுக்கு வெளியே கூட்டம் கூட்டமாக விடிய விடிய ஆவலுடன் காத்திருந்த ஐ-போன் பிரியர்கள் ஐ-போன் 16 மற்றும் 16 ப்ரோ ரக ஸ்மாா்ட் போன்களை வாங்கி சென்றனர்.

சொல்லப் போனால்… திமுக பவள விழாவும் திராவிட சமரசங்களும்!

அவற்றில் ஐ-போன் 16 மற்றும் 16,ப்ரோ மேக்ஸ் ரகங்களை அந்த நிறுவனம் முறையே ரூ.79,900, மற்றும் 89,900, 128 ஜிபி ஐ-போன் 16 ப்ரோ ரூ.1,19,900 மற்றும் ரூ. 256 ஜிபி ஐ-போன் 16 ப்ரோ மேக்ஸ் ரூ.1,44,900-க்கு செப்டம்பர் 13 முதல் ஆர்டர்கள் தொடங்கியது. ஐ-போன் ப்ரோ வரிசை அறிதிறன்பேசிகளை விரைவில் இந்தியாவிலேயே தயாரிக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்திய ஸ்மார்ட்போன் வணிக சந்தையில் முந்தைய ரக ஐ-போன்களைவிட குறைவான விலையில் புதிய ரகத்தை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்துவது இதுவே முதல்முறை.

இந்த நிலையில், ஐ-போன் 16 மற்றும் 16 ப்ரோ ரக அறிதிறன்பேசிகளின் (ஸ்மாா்ட் போன்) முதல் நாள் விற்பனை சிறப்பாக இருந்தததாகவும், கடந்த ஆண்டை விட 25 சதவீதம் அதிகமாக நடைபெற்றுள்ளதாக ஒரு சில விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டை விட ஐ-போன் 16 மற்றும் 16 ப்ரோ ரக ஸ்மாா்ட் போன் முதல் நாள் விற்பனை 20 சதவீதம் அதிகமாக நடந்துள்ளது, அதே சமயம் 16 ப்ரோ மாடல்களின் விற்பனை 25 சதவீதம் அதிகமாக நடந்துள்ளது.

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்வதற்கான நெருக்கத்தில் இந்தியா!

முந்தைய ரகங்களுடன் ஒப்பிடும்போது, ​​ஐ-போன் 16 ரகங்களின் விலை அனைவரும் வாங்கக்கூடிய விதத்தில் உள்ளதே இந்த விற்பனை வெற்றிக்கு காரணம் என்றும், வெளியீட்டின் காலாண்டில் ஐ-போன் 16 மற்றும் 16 ப்ரோ ரக ஸ்மாா்ட் போன் விற்பனை ஆண்டுக்கு 30 சதவீத வளர்ச்சியை எட்டும் என கூறப்படுகிறது.

ஸ்மாா்ட் போன் சந்தையில் ஐ-போன் 16 ரக ஸ்மார்ட் போனுக்கான விற்பனை மிக உற்சாகம் அதிகமாக இல்லாவிட்டாலும், அதே நிலையில் விற்பனையாகி வருவதாக சில விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

"பெரும்பாலும், இந்தியாவில் விற்கப்படும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும், அவற்றில் 30 சதவீதம் ஐ-போன்கள், இதில் சமீபத்திய ஐ-போன் 16 ரகம் மட்டுமல்ல, மற்ற மாடல்களும் அடங்கும். இருப்பினும், ஐ-போன் 16 மற்றும் 16 ப்ரோ ரகம் போன்ற பிரீமியம் ரகங்களைவிட மேக்ஸ் ரகங்களை தேடியே அதிகமான வாடிக்கையாளர்கள் ஸ்டோர்களுக்கு வருவதாகவும், இந்தியாவில் ஆப்பிள் ஐ-போன் விற்பனை காலாண்டில் சாதனை படைக்கும் என்று கவுண்டர்பாயின்ட் ஆராய்ச்சி இயக்குநர் தருண் பதக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் இந்த நிறுவனம் இந்தியாவில் 12 மில்லியன் ஐ-போன் விற்பனையை எட்ட வாய்ப்புள்ளது கூறினார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024