Tuesday, September 24, 2024

இந்தியாவில் மக்கள் தொகை 2060-ல் 170 கோடியாக அதிகரிக்கும் ஐ.நா அறிக்கை

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

இந்தியாவில் மக்கள் தொகை 2060-ல் 170 கோடியாக அதிகரிக்கும் : ஐ.நா. அறிக்கைமக்கள் தொகை

மக்கள் தொகை

2060-ஆம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை 170 கோடியாக அதிகரிக்கும் என ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. வெளியிட்ட நிகழாண்டின் ‘உலக மக்கள்தொகை கணிப்புகள்’ அறிக்கையின்படி, உலகின் மக்கள்தொகை அடுத்த 50 முதல் 60 ஆண்டுகளில் தொடா்ந்து உயரும் எனவும், நடப்பாண்டில் 820 கோடியாக உள்ள உலக மக்கள்தொகை 2080-ஆம் ஆண்டுகளில் சுமாா் ஆயிரத்து 30 கோடி என்ற உச்சத்தை தொடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்த சீனாவைக் கடந்த ஆண்டு முந்திய இந்தியா, நடப்பு நூற்றாண்டின் இறுதி வரை அந்த இடத்தைத் தக்க வைக்கும் எனவும் கூறப்பட்டடுள்ளது. தற்போது 145 கோடியாக இருக்கும் இந்தியாவின் மக்கள் தொகை, 2054-இல் 169 கோடி என்ற உச்சத்தை அடையும் எனவும் 2060-ஆம் ஆண்டில் 170 கோடியாக அதிகரிக்கும் எனவும் ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

தற்போது உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனா, அடுத்த 30 ஆண்டுகளில் சுமாா் 20 கோடி வரை மக்கள் தொகை சரிவைச் சந்திக்கலாம் எனவும்,

இதையும் படிங்க:
நாடு முழுவதும் 12 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் – 10 இடங்களில் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி!

தற்போது அதிக மக்கள் தொகை கொண்ட மூன்றாவது பெரிய நாடான அமெரிக்காவை, 2054-ல் பாகிஸ்தான் முந்திவிடும் என ஐ.நா. சபை கணித்துள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
population
,
UNO

You may also like

© RajTamil Network – 2024