இந்தியா – நேபாளம் இடையிலான பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும்: நேபாள பிரதமர்!

by rajtamil
Published: Updated: 0 comment 14 views
A+A-
Reset

இந்தியா – நேபாளம் இடையிலான பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்று நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலி தெரிவித்துள்ளார்.

நேபாளத்தின் முன்னாள் அரசு அதிகாரி சூர்யநாத் உபாத்யாய் எழுதிய ’சர்வதேச நீர்வழிகள் சட்டம்: நேபாளம் – இந்தியா ஒத்துழைப்பின் பார்வை’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பிரதமர் கே.பி. சர்மா ஓலி கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் பேசிய அவர், “இந்தியா நமது அண்டை நட்பு நாடு. நேபாளமும், இந்தியாவும் வளமான கலாச்சாரத்தைக் கொண்டுள்ள நாடுகள். எனவே, நாம் வெளிப்படையான உரையாடலைக் கொண்டிருக்க வேண்டும். நாம் வெளிப்படையாகப் பேச முடியாமைக்கு புவி சார்ந்த அரசியல் சூழ்நிலைகளை மட்டுமே காரணமாக சொல்ல முடியாது. அதிகாரத்தைப் பெறுவதற்கும், நிலைநிறுத்துவதற்குமான எந்த விளையாட்டிலும் நாம் ஈடுபடக்கூடாது” என்று தெரிவித்தார்.

ரஷிய அதிபர் புதினுக்கு ரகசியமாக இரு மகன்கள்: வெளியானது மறைக்கப்பட்ட ஆடம்பர வாழ்க்கை!

கடந்த 2020 ஆம் ஆண்டில் இந்தியாவைச் சேர்ந்த லிம்பியாதுரா, காலாபானி மற்றும் லிபுலேக் பகுதிகளை உள்ளடக்கி நாட்டின் புதிய வரைபடத்தை நேபாளம் வெளியிட்டது. அதன் பிறகு, இரு நாட்டிற்குமிடையிலான உறவில் அழுத்தம் ஏற்பட்டது.

அப்போது பிரதமராக இருந்த ஓலி, அதிகரித்து வந்த உள்நாட்டு பிரச்னைகளை திசைதிருப்ப இந்தப் பிரச்னையைப் பயன்படுத்த முயன்றார். மேலும், நேபாளத்தின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிடுவதாகவும் அவர் கூறியிருந்தார்.

நேபாளத்தின் வரைபடத்தில் குறிப்பிட்டிருந்த இந்திய நாட்டின் பகுதிகள்

இதனைக் குறிப்பிட்டு பேசிய ஓலி, “முந்தையக் கால வெளியுறவுக் கொள்கைகள் நாட்டின் பலம் மற்றும் ஆதிக்கத்தால் பராமரிக்கப்பட்டன. ஆனால், இரண்டாம் உலகப் போருக்குப் பின், ஒரு நாடு தனது தேசிய நலன்களை சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் ஒப்பந்தங்களின் அடிப்படையில் நியாயமாக முன்வைக்க வேண்டும்.

பொதுவான வளங்கள் குறித்த விவகாரங்களில் ஒருதலைப் பட்சமான கருத்துகள் இருக்கக்கூடாது. அவை, ஒருமித்தக் கருத்துகள் மற்றும் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளின் வழியே செய்யப்பட வேண்டும்” என்று கூறினார்.

கமலா ஹாரிஸுக்கு விளாதிமீா் புதின் திடீா் ஆதரவு

மலைகளால் சூழப்பட்டுள்ள நேபாளம் சரக்கு மற்றும் சேவைகளின் போக்குவரத்திற்கு இந்தியாவை நம்பியுள்ளது. ஒட்டுமொத்த நலன்கள் தொடர்பாக இந்தியாவிற்கும் நேபாளத்தின் உறவு முக்கியமானது. இருநாட்டுத் தலைவர்களும் இந்தியா – நேபாளத்தின் உறவு என்பது ‘ரொட்டி – பேட்டி’ உறவு போன்றது என உறவுப் பிணைப்புத் தொடர்பான சொற்றொடர்களை அடிக்கடி பயன்படுத்தியுள்ளனர்.

இந்தியாவின் சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் 1,850 கி.மீ தூரம் வரையிலான எல்லைப் பகுதிகளை நேபாளத்துடன் பங்கிட்டுக் கொள்வது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024