இந்தியா – வங்காளதேசம் 2-வது டெஸ்ட்: போதிய வெளிச்சம் இன்மையால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தம்

இந்தியா – வங்காளதேசம் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

கான்பூர்,

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் சென்னையில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா- வங்காளதேசம் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி 35 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் அடித்திருந்தபோது போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Bad light stops play in Kanpur.Stay tuned for further updates.Scorecard – https://t.co/JBVX2gyyPf#TeamIndia | #INDvBAN | @IDFCFIRSTBank

— BCCI (@BCCI) September 27, 2024

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: வினோத் காம்ப்ளியின் மாபெரும் சாதனையை தகர்த்து பிராட்மேனை சமன் செய்த கமிந்து மென்டிஸ்

பாண்ட்யாவால் நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பி வர முடியாது.. ஏனெனில்.. – இந்திய முன்னாள் வீரர்

மழையால் ஓவர்கள் குறைப்பு.. இங்கிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு