Friday, September 20, 2024

இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக குர்பிரீத் செயல்படுவார் – பயிற்சியாளர் அறிவிப்பு

by rajtamil
Published: Updated: 0 comment 26 views
A+A-
Reset

2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்றின் 2-வது ரவுண்டில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது

தோகா,

2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்றின் 2-வது ரவுண்டில் இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ளது. கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் இந்திய அணி தனது கடைசி லீக்கில் கத்தார் அணியை, அல்ரேயானில் நாளை சந்திக்கிறது.

குவைத்துக்கு எதிரான கடந்த ஆட்டத்துடன் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு பெற்று விட்டதால் புதிய கேப்டனாக கோல் கீப்பர் குர்பிரீத் சிங் சந்து நியமிக்கப்பட்டுள்ளார். 32 வயதான குர்பிரீத் சிங் இதுவரை 71 ஆட்டங்களில் விளையாடி உள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளில் சுனில் சேத்ரி, சந்தேஷ் ஜின்கான் ஆகியோருடன் குர்பிரீத் சிங்கும் எங்களது கேப்டன்ஷிப் குழுவில் ஒருவராக இருந்தார். எனவே தற்போதைய சூழலில் அவர் அணியின் பொறுப்பை ஏற்கிறார்' என்று இந்திய பயிற்சியாளர் ஸ்டிமாக் தெரிவித்தார்.

You may also like

© RajTamil Network – 2024