Friday, September 20, 2024

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவு

by rajtamil
0 comment 22 views
A+A-
Reset

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் தற்போது வரை வெளியாகவில்லை.

ஜகார்த்தா,

இந்தோனேசியாவின் கிழக்கு பப்புவா மாகாணத்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 7.11 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகியுள்ளது.

மேற்கு பப்புவா மாகாணத்தில் பூமிக்கு அடியில் 78 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்தன. இதனால் அச்சம் அடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் தற்போது வரை வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

கடந்த 5ம் தேதி இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா தீவில் 5.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024