இந்தோனேசியா: சட்டவிரோத தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு! 15 பேர் பலி!

இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழையால் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 15 பேர் பலியாகினர்.

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமையில் பெய்த கனமழையின் காரணமாக சோலோக் மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்தது.

மேலும், நிலச்சரிவின்போது அந்த சுரங்கத்தில் 25 பேர் வரையில் பணியில் இருந்துள்ளனர். அவர்களில் 15 பேர் நிலச்சரிவில் சிக்கி பலியாகினர். பிற தொழிலாளர்களில் 3 பேர் காயமடைந்தும், இடிபாடுகளில் சிக்கிய 7 பேரை தேடியும் வருகின்றனர்.

சுரங்கத்தில் இருந்த தொழிலாளர்கள், இயந்திரங்கள் ஏதுமின்றி கைகளாலேயே தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. விபத்து ஏற்பட்ட பகுதிக்கு சாலை இல்லாத காரணத்தினால் 8 மணிநேரம் ஏற வேண்டியுள்ளதாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினர் உள்ளிட்ட மீட்புக் குழுவினர் கூறுகின்றனர்.

நெய் என நாம் சாப்பிடுவது எல்லாம் நெய்தானா?

Related posts

Indian Army is developing indigenous Sensor Fuzed Munitions

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் செந்தில் பாலாஜி சந்திப்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்