Saturday, September 21, 2024

இந்த ஆண்டு சுதந்திர தினம் 7 7 அல்லது 78-வது வருடமா? இதோ விளக்கம்

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

Independence Day 2024 : இந்த ஆண்டு சுதந்திர தினம் 77 அல்லது 78-வது வருடமா? குழப்பமா இருக்கா? விளக்கம் இதோ..Independence Day 2024 : இந்த ஆண்டு சுதந்திர தினம் 77 அல்லது 78-வது வருடமா? குழப்பமா இருக்கா? விளக்கம் இதோ..

இந்தியாவின் சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15 நாள் கொண்டாடப்படவுள்ளது. இந்த ஆண்டுடன் இந்தியா சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகள் ஆகின்றது. அதே போல், இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 இல் 78வது சுதந்திரம் தினம் கொண்டாடப்படவுள்ளது. ஆனால் இதில் பலருக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.

2024-ம் ஆண்டில் இந்தியா கொண்டாட இருப்பது, 77வது சுதந்திர தினமா அல்லது 78வது சுதந்திர தினமா?

இந்த விவாதம் இரண்டு வித்தியாசமான கோணத்தில் ஏற்படுகிறது. இந்தியாவிற்கு ஆகஸ்ட் 15, 1947 அன்று சுதந்திரம் கிடைத்தது. எனவே, அந்த தினத்தை முதல் சுதந்திர தினமாக எடுத்துக் கொண்டு, அதுவே முதல் ஆண்டாக கருதலாம். எனவே, சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து, அந்த ஆண்டிலிருந்து கணக்கெடுத்தால், இந்த ஆண்டு, 78வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம்.

விளம்பரம்

இதற்கு மாறாக, சுதந்திரம் கிடைத்த 1947 ஆம் ஆண்டை முதல் ஆண்டாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், ஆகஸ்ட் 15, 1948 முதல் ஆண்டாக (first anniversary of freedom) என்று கருதினால், இந்த ஆண்டு 77வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம்.

மத்திய தகவல் தொடர்புத்துறை (PIB) அளித்த தகவலின் படி, ’ஆகஸ்ட் 15, 2023, 77-வது சுதந்திர தினமாக கொண்டாடப்பட்டது. இதன் அடிப்படையில், நமது அரசு சுதந்திரம் கிடைத்த தினத்தை முதல் ஆண்டாக கருதுகிறது என்றும், அரசு பின்பற்றும் முறைப்படி, இந்த ஆண்டு இந்தியாவின் 78வது சுதந்திர தினமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

விளம்பரம்

நீண்ட கால போராட்டத்துக்குப் பின் தான் இந்தியா பிரிட்டிஷ்காரர்களின் பிடியில் இருந்து விடுதலைப் பெற்றது. சுதந்திர தினக் கொண்டாட்டத்தில், நம் நாட்டின் விடுதலைக்கும், நாட்டு மக்கள் அடிமைத்தனத்தில் இருந்து விடுபட்டு, சுதந்திரமாக வாழவும் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் தியாகிகளுக்கும் மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மிகவும் விமரிசையாக சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படும்.

1947 ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து, தற்போது 75 ஆண்டுகளுக்கும் மேல் ஆகி விட்டது. ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் விமரிசையாகக் கொண்டாடப்படும். தேசிய விடுமுறை நாளாக இருந்தாலும், நாடு முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், அலுவலகங்கள், ஐகானிக் கட்டிடங்கள் என்று பல இடங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, சுதந்திர தினம் கொண்டாடப்படும்.

விளம்பரம்

இதையும் படிக்க:மருத்துவ மாணவி வன்கொடுமை செய்து கொலை… நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்!

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உள்ள செங்கோட்டை, சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக விசேஷமாக தயார் செய்யப்படும். சுதந்திர தினத்துக்கு முந்தைய நாட்களில் இருந்தே மக்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் தயாராகும். செங்கோட்டையில், சுதந்திரம் கிடைப்பதற்கு முந்தைய நாள் இரவு, இந்தியாவின் முதல் பிரதமர் மறைந்த ஜவஹர்லால் நேரு ‘Tryst with Destiny’ என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க உரையை வழங்கினார்.

விளம்பரம்

அந்த நிகழ்வில் இருந்தே, செங்கோட்டையில் சுதந்திர தின விழா என்பது ஒரு பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் அடையாளமாக திகழும் வரலாற்று சின்னங்களில் ஒன்று தான் ‘லால் குயிலா’ என்றும் அழைக்கப்படும் செங்கோட்டை. வரலாற்றின் முக்கியத்துவம், போராட்டங்கள், போர்கள் மற்றும் தியாகங்களுக்கு சாட்சியாக இருந்த செங்கோட்டை வலிமையின் சின்னமாக கருதப்படுகிறது.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Independence day

You may also like

© RajTamil Network – 2024