இந்த வார விசேஷங்கள்: 18-6-2024 முதல் 24-6-2024 வரை

by rajtamil
0 comment 30 views
A+A-
Reset

நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 21) ஆனித் திருவிழா தேரோட்டம் நடைபெறுகிறது.

18-ந் தேதி (செவ்வாய்)

* சர்வ ஏகாதசி.

* திருக்கோளக்குடி சிவபெருமான் கயிலாய வாகனத்தில் உலா.

* திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் சிறிய திருவடியிலும், தாயார் தோளுக்கினியானிலும் பவனி.

* திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு.

* சமநோக்கு நாள்.

19-ந் தேதி (புதன்)

* கானாடுகாத்தான் சிவபெருமான் திருக்கல்யாணம்.

* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் பூக்குழி விழா, இரவு புஷ்ப சப்பரம்.

* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர், திருப்பரங்குன்றம் முருகன் கோவில்களில் ஊஞ்சல் சேவை.

* கீழ்நோக்கு நாள்.

20-ந் தேதி (வியாழன்)

* திருநெல்வேலி நெல்லையப்பர் கங்காளநாதர் காட்சி.

* திருக்கோளக்குடி, கண்டதேவி, கானாடு காத்தன் தலங்களில் சிவபெருமான் ரத உற்சவம்.

* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் யானை வாகனத்தில் பவனி.

* சமநோக்கு நாள்.

21-ந் தேதி (வெள்ளி)

* பவுர்ணமி.

* காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா.

* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் முப்பழ உற்சவம்.

* திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கிரிவலம்.

* நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் ஆனித் திருவிழா தேரோட்டம்.

* சமநோக்கு நாள்.

22-ந் தேதி (சனி)

* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ரிஷப வாகனத்தில் பவனி.

* திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் யானை வாகனத்தில் உலா.

* மதுராந்தகம் கோதண்டராம சுவாமி பவனி.

* கீழ்நோக்கு நாள்.

23-ந் தேதி (ஞாயிறு)

* திருத்தங்கல் அம்பாள் கண்ணாடி சப்பரத்தில் வீதி உலா.

* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் முத்துப் பல்லக்கில் பவனி.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.

* திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

* கீழ்நோக்கு நாள்.

24-ந் தேதி (திங்கள்)

* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

* திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் குதிரை வாகனத்திலும், தாயார் பூப்பல்லக்கிலும் பவனி.

* மதுராந்தகம் கோதண்டராம சுவாமி திருவீதி உலா.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மாடவீதி புறப்பாடு.

* மேல்நோக்கு நாள்

You may also like

© RajTamil Network – 2024