இனி பாலியல் வன்கொடுமை கொலைகளுக்கு மரண தண்டனை?

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

இனி பாலியல் வன்கொடுமை கொலைகளுக்கு மரண தண்டனை? – குடியரசு தலைவருக்கு மசோதா அனுப்பி வைப்பு!இனி பாலியல் வன்கொடுமை கொலைகளுக்கு மரண தண்டனை? - குடியரசு தலைவருக்கு மசோதா அனுப்பி வைப்பு!

பாலியல் குற்றத்துக்கு கடும் தண்டனை வழங்கும் வகையில், மேற்கு வங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு மாநில ஆளுநர் ஆனந்த போஸ் அனுப்பி வைத்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த மாதம் 9 ஆம் தேதி முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், கடந்த 3-ஆம் தேதி, அபராஜிதா என்ற பெயரில் மேற்கு வங்க சட்டமன்றத்தில் மசோதா ஒன்றை மாநில அரசு நிறைவேற்றியது. அந்த மசோதாவின்படி, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தால் குற்றவாளிக்கு மரண தண்டனை அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

விளம்பரம்

இதையும் படிக்க:
பொதுவெளியில் பாலியல் வன்கொடுமை; வேடிக்கை பார்த்த மக்கள்: மத்தியப் பிரதேசத்தில் கொடூரம்!

மேலும், கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தால் சிறைவிடுப்பு இன்றி ஆயுள் தண்டனையை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு மாநில ஆளுநர் ஆனந்த போஸ் அனுப்பி வைத்துள்ளார்.

முன்னதாக மசோதாவின் உரிய மொழியாக்கத்தை, விதிகளின்படி வழங்குவதில் மாநில சட்டப்பேரவை தவறிவிட்டதாக ஆளுநர் மாளிகை அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Kolkata Doctor Murder Rape
,
Mamata Banerjee
,
West Bengal

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024