Saturday, September 21, 2024

இனி முன்பதிவு பெட்டிகளில் கூட்டம் வராது… களமிறங்கும் சிறப்பு குழு

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

களமிறங்கிய ஸ்பெஷல் டீம்… இனி முன்பதிவு செய்த ரயில் பயணிகளுக்கு அந்த சிக்கல் இருக்காதுகோப்புப்படம்

கோப்புப்படம்

விரைவு ரயில்களில் உரிய அனுமதியின்றி பயணிப்போர் மீது நடவடிக்கை எடுக்கும் பணியில் சிறப்புக் குழு ஈடுபட்டுள்ளது.

விரைவு ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் உரிய அனுமதியின்றி பயணிப்போருக்கு அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே அறிவித்திருந்த நிலையில், சென்னை கோட்டத்தில் சிறப்புக்குழு களம் இறக்கப்பட்டுள்ளது.

விரைவு ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் அனுமதியில்லாதவர்கள் பயணம் செய்வது தொடர்கதையாகி வருகிறது. இதுகுறித்து, மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், அனைத்து மேலாளர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது, முன்பதிவு பெட்டிகளில் கூட்டம் நிரம்புவது குறித்து ஆய்வு மேற்கொள்ளும் வகையில் சிறப்புக் குழுவை அமைக்க மண்டல ரயில்வே அதிகாரிகளுக்கு, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

விளம்பரம்

இதையும் படிக்க:
இனி ரயில்களில் இப்படி செய்தால் கட்டாயம் அபராதம் – ரயில்வே நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!

மேலும், முன்பதிவு பெட்டிகளில் அனுமதியின்றி பயணம் செய்வோர் குறித்த புகார் எழுந்த 10 சிறப்பு ரயில்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அதன் தொடர்ச்சியாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், ரயில்களில் முன்பதிவு இல்லாத பயணிகள் அல்லது உரிய பயணச்சீட்டு இல்லாத நபர்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும், பாதுகாப்பு படை வீரர்களின் உதவியுடன், அவர்கள் அடுத்த நிறுத்தத்தில் இறக்கிவிடப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

A special team of RPF and Ticket-checking staff of Chennai Division deboarded unauthorized passengers from reserved coaches in Express Trains.#ChennaiDivisionpic.twitter.com/59lIcGTNpd

— DRM Chennai (@DrmChennai) June 15, 2024

விளம்பரம்

இந்நிலையில், முன்பதிவு பெட்டிகளில் அனுமதியின்றி பயணிப்போர் குறித்து ஆராய சென்னை கோட்டத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் டிக்கெட் பரிசோதகர்கள் அடங்கிய சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Indian Railways
,
Train
,
Train Ticket Reservation

You may also like

© RajTamil Network – 2024