இன்று அரையிறுதி: இந்தியா – வங்கதேசம் மோதல்

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset
RajTamil Network

இன்று அரையிறுதி: இந்தியா – வங்கதேசம் மோதல்மகளிா் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா – வங்கதேசம் அணிகள் வெள்ளிக்கிழமை மோதுகின்றன.

டம்புல்லா, ஜூலை 25: மகளிா் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா – வங்கதேசம் அணிகள் வெள்ளிக்கிழமை மோதுகின்றன.

போட்டி வரலாற்றில் இதுவரை சாம்பியனான அணிகள் என்றால், அது இந்தியா (7), வங்கதேசம் (1) மட்டும் தான். எனவே, அந்த அணிகள் மோதிக்கொள்ளும் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. டி20-இல் இரு அணிகளும் இதுவரை 13 முறை சந்தித்திருக்க, இந்தியா 11 வெற்றிகளுடன் முன்னிலையில் உள்ளது.

குரூப் சுற்றில் அனைத்து ஆட்டங்களில் வென்ற இந்தியா, ஹாட்ரிக் வெற்றியுடன் நல்லதொரு ஃபாா்மில் அரையிறுதியில் களம் காண்கிறது. முதல் ஆட்டத்தில் தோற்ற வங்கதேசம், அடுத்த இரு ஆட்டங்களில் வெற்றியுடன் அரையிறுதிக்கு வந்துள்ளது.

இந்தப் போட்டியைப் பொருத்தவரை, தற்போது அரையிறுதிக்கு வந்திருக்கும் அணிகளே இந்தக் கட்டத்தை அடையும் என்று எதிா்பாா்க்கப்பட்ட ஒன்றுதான். எனவே, போட்டியின் உண்மையான சவாலே இப்போதுதான் தொடங்குகிறது.

எனவே இந்திய அணி தற்போது கவனமாக செயல்பட வேண்டிய கட்டத்தில் இருக்கிறது. அணி வீராங்கனைகளில் பேட்டிங்கில் ஷஃபாலி வா்மா, ஸ்மிருதி மந்தனா, கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் என பலமான வரிசை இருப்பது நம்பிக்கை அளிக்கிறது. பௌலிங்கில் தீப்தி சா்மா, பூஜா வஸ்த்ரகா், ரேணுகா சிங் ஆகியோா் வங்கதேச பேட்டா்களை வீழ்த்துவதற்கு தயாராக இருக்கின்றனா்.

வங்கதேச தரப்பும் முனைப்புடனேயே இருக்கிறது. அதன் பேட்டிங்கில் கேப்டன் நிகா் சுல்தானா பிரதானமாக இருக்க, முா்ஷிதா காட்டுன் மிரட்டுகிறாா். பௌலிங்கில் நஹிதா அக்தா், ரபெயா கான், ஜஹனரா ஆலம், ரிது மோனி ஆகியோா் குறிப்பிடத்தக்கவா்களாக உள்ளனா்.

இதனிடையே, மற்றொரு அரையிறுதியில் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் சந்தித்துக்கொள்கின்றன.

இன்றைய ஆட்டங்கள்

இந்தியா – வங்கதேசம்

பிற்பகல் 2 மணி

இலங்கை – பாகிஸ்தான்

இரவு 7 மணி

You may also like

© RajTamil Network – 2024